தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அமைச்சர் சிவசங்கருக்கு மீண்டும் கரோனா! - அமைச்சர் சிவசங்கருக்கு கரோனா

பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கருக்கு மீண்டும் கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

minister-sivasankar-tested-covid-positive-again
minister-sivasankar-tested-covid-positive-again

By

Published : Jan 19, 2022, 12:41 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் கரோனா பாதிப்பு என்பது நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. தினசரி கரோனா பாதிப்பு என்பது 20 ஆயிரத்தைக் கடந்துவிட்ட நிலையில் தொற்றைக் கட்டுப்படுத்த மாநில அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.

இந்நிலையில், தற்போது திரைப் பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் கரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டுவருகின்றனர். அந்த வகையில், எஸ்.எஸ். சிவசங்கருக்கு மீண்டும் கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து, தனது வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டதாகத் தகவல் தெரிவித்துள்ளார். மேலும், சிவசங்கர், தன்னுடன் தொடர்பில் இருந்தவர்களைத் தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தியுள்ளார்.

சிவசங்கருக்கு கடந்த ஆண்டு மே மாதம் 9ஆம் தேதி கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. இதன் காரணமாக அப்போது நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் சிவசங்கர் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : வடசென்னையில் 15 ஆயிரத்தை கடந்த கரோனா பாதிப்பு

ABOUT THE AUTHOR

...view details