தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் 3-வது முறையாக நீட்டிப்பு - நீதிபதி அதிரடி உத்தரவு! - senthil balaji custody extend

அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை ஆகஸ்ட் 8ஆம் தேதி வரை நீட்டித்து மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.அல்லி உத்தரவிட்டுள்ளார்.

Etv Bharat
Etv Bharat

By

Published : Jul 26, 2023, 3:35 PM IST

Updated : Jul 26, 2023, 5:52 PM IST

சென்னை:சட்டவிரோத பண பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் கடந்த ஜூன் 14ஆம் தேதி அதிகாலை, அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறையினர் அவரது இல்லத்தில் வைத்து கைது செய்தனர். இதனைத் தொடர்ந்து, செந்தில் பாலாஜிக்கு ஏற்பட்ட உடல் நலக் குறைவு காரணமாக ஓமந்தூரார் அரசு மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அன்றைய தினம் பிற்பகல், மருத்துவமனைக்குச் சென்ற சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி, செந்தில் பாலாஜியை நேரில் பார்வையிட்டு, அவரை 14 நாள்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செந்தில் பாலாஜிக்கு, இதய அறுவை சிகிச்சை நடத்தப்பட்டது.

சிகிச்சை முடிந்த பிறகு ஜூலை 17ஆம் தேதி புழல் சிறையில் உள்ள மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். இந்நிலையில், செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் இன்று (ஜூலை 26) முடிவுக்கு வந்தது. இதனைத் தொடர்ந்து, புழல் சிறையில் இருந்து காணொலி காட்சி மூலம் செந்தில் பாலாஜி, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

தொடர்ந்து, காணொலி காட்சி மூலம் ஆஜரான செந்தில் பாலாஜியின் உடல் நலம் குறித்து விசாரித்த நீதிபதி அல்லி, அவரின் நீதிமன்ற காவலை ஆகஸ்ட் 8ஆம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார். செந்தில் பாலாஜிக்கு நீதிமன்ற காவல் மூன்றாவது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனைவி தொடர்ந்த ஆட்கொணர்வு மனு; உயர் நீதிமன்றம் வழங்கிய முக்கிய தீர்ப்பு

Last Updated : Jul 26, 2023, 5:52 PM IST

ABOUT THE AUTHOR

...view details