சென்னை: டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அனைத்து முதுநிலைமண்டல மேலாளர்கள், மாவட்ட மேலாளர்கள் மற்றும் சிறப்பு பறக்கும்படை அலுவலர்களின் செயல்பாடு குறித்து ஆய்வு நடத்தினார்.
அப்போது பேசிய அவர், "டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனைக்கடைகள் அனுமதிக்கப்பட்ட பணிநேரத்தில் மட்டுமே செயல்பட வேண்டும். மதுபானங்கள் அனைத்தும் மதுபானக் கடைகளில் மட்டுமே விற்கப்பட வேண்டும்.
கூடுதல் விலைக்கு விற்பனை செய்யக்கூடாது
சட்டவிரோதமாக மதுக்கூடங்கள் அல்லது மற்ற பெட்டிக் கடைகளில் விற்கப்படுகிறதா என கண்டறிந்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். மதுபானங்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்யக்கூடாது.