தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சவுக்கு சங்கருக்கு எதிராக அமைச்சர் செந்தில் பாலாஜி 4 அவதூறு வழக்கு! - 4 அவதூறு வழக்கு தாக்கல்

அவதூறு வீடியோக்கள் வெளியிட்டதாக சவுக்கு சங்கருக்கு எதிராக தமிழக மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி சார்பில், சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நான்கு அவதூறு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

சவுக்குக்கு எதிராக பாய்ந்த மின்சாரம்! நான்கு அவதூறு வழக்குகள் தாக்கல்..
சவுக்குக்கு எதிராக பாய்ந்த மின்சாரம்! நான்கு அவதூறு வழக்குகள் தாக்கல்..

By

Published : May 15, 2023, 1:15 PM IST

சென்னை:அவதூறு வீடியோக்கள் வெளியிட்டதாகக் கூறி சவுக்கு சங்கருக்கு எதிராக தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி நான்கு அவதூறு வழக்குகளை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். அந்த மனுக்களில், பல்வேறு யூடியூப் தளங்களுக்கு சவுக்கு சங்கர் அளித்த பேட்டியில், மகாராஷ்டிராவில் சிவசேனா கூட்டணி அரசை, ஏக்நாத் ஷிண்டே கவிழ்த்ததைப் போல, தமிழகத்தில் திமுக அரசை கவிழ்த்து விடுவதாக தனக்கு எதிராக கருத்து தெரிவித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க:தஞ்சை உணவு திருவிழாவில் காய்கறியில் விலங்குகள்.. கலக்கிய கல்லூரி மாணவர்கள்!

மேலும், டாஸ்மாக் பார்களை தான் நடத்தி வருவதாகவும், அதனால் தன் மீது திமுகவினர் விரக்தியில் இருப்பதாக சவுக்கு சங்கர் தெரிவித்துள்ளதாகக் குறிப்பிட்டிருக்கிறார். இதேபோல, ட்விட்டர் பக்கத்தில் தனக்கு எதிராக பல்வேறு அவதூறு கருத்துக்களை பதிவிட்டுள்ளதாகவும், அரசியல் விரோதிகளின் தூண்டுதலின் பெயரில், எந்த அடிப்படை ஆதாரமும் முகாந்திரமும் இல்லாமல் தனது புகழுக்கு களங்கம் விளைவிக்கும் சவுக்கு சங்கரை அவதூறு சட்டப் பிரிவின் கீழ் தண்டிக்க வேண்டும் எனவும் மனுக்களில் கேட்டுக் கொண்டிருக்கிறார்.

இதனை தொடர்ந்து, அமைச்சர் செந்தில்பாலாஜியின் இந்த மனுவை மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் மற்றும் வழக்கறிஞர் ரிச்சர்ட்சன் வில்சன் ஆகியோர் தாக்கல் செய்துள்ளனர். மேலும், இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க:நெல்லையில் கிரிக்கெட் பந்தை தேடி கிணற்றுக்குள் குதித்த சிறுவன் பலி!

ABOUT THE AUTHOR

...view details