தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

செந்தில் பாலாஜி நீதிமன்ற காவல் நீட்டிப்பு.... அமலாக்கத்துறை சமர்பித்த ஆவணங்கள் என்னென்ன? - நீதிபதி அல்லி

செந்தில் பாலாஜிக்கு ஆகஸ்ட் 25ஆம் தேதி வரை நீதிமன்ற காவலை நீட்டித்து சென்னை மாவட்ட முதன்மை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் நீடிப்பு
செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் நீடிப்பு

By

Published : Aug 12, 2023, 6:37 PM IST

Updated : Aug 12, 2023, 6:49 PM IST

சென்னை: சட்டவிரோத பண பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் கடந்த ஜூன் 14ஆம் தேதி அதிகாலை அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறையினர் கைது செய்தனர். இந்நிலையில் உடல் நலக்குறைவு காரணமாக அவர் ஓமந்தூரார் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அன்றைய தினம் பிற்பகலில் மருத்துவமனைக்குச் சென்ற சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி, செந்தில் பாலாஜியை நேரில் பார்வையிட்டு அவரை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செந்தில் பாலாஜிக்கு இதய அறுவை சிகிச்சை நடத்தப்பட்டது.

அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை கைது செய்த நிலையில், அவரை விடுவிக்கக் கோரி அவருடைய மனைவி மேகலா தொடர்ந்த ஆட்கொணர்வு மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு மாறுபட்ட தீர்ப்பை அளித்தனர்.

இதையடுத்து, இந்த வழக்கை விசாரித்த 3வது நீதிபதியான சி.வி.கார்த்திகேயன், நீதிபதி டி.பரத சக்கரவர்த்தியின் தீர்ப்பை உறுதி செய்தார். அவர் தனது தீர்ப்பில் செந்தில் பாலாஜியும் சட்டத்துக்கு உட்பட்டவர் தான் என்பதால் அவரை அமலாக்கத் துறை கைது செய்தது செல்லும் என்றும் அவர் பரிபூரணமாக குணமடைந்த பிறகு அவரை காவலில் எடுத்து விசாரிக்கலாம் என்றும் தீர்ப்பளித்தார்.

இதையும் படிங்க:தமிழகத்தில் பாஜக எதிர்கட்சியா? - நகைச்சுவை என்கிறார் ஸ்டாலின்!

இந்தத் தீர்ப்பை எதிர்த்து செந்தில் பாலாஜி மனைவி தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்து தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம் செந்தில் பாலாஜியை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத் துறைக்கு அனுமதியளித்து ஆகஸ்ட் 7ஆம் தேதி உத்தரவிட்டது. இதையடுத்து அன்று இரவே புழல் சிறையில் இருந்த அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை அதிகாரிகள் காவலில் எடுத்து விசாரணையைத் தொடங்கினா்.

இந்நிலையில் ஆகஸ்ட் 12ஆம் தேதியான இன்றுடன் செந்தில் பாலாஜியின் காவல் முடிவடைந்தது. இதைத் தொடர்ந்து சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன்பு, செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை அதிகாரிகள் ஆஜர்படுத்தினர்.

மேலும் 5 நாட்கள் நடத்திய விசாரணை குறித்த குற்றப்பத்திரிகையை அமலாக்கத் துறையினர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி, அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை வரும் ஆகஸ்ட் 25ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார்.

குற்றப்பத்திரிக்கையில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் பெயர் மட்டுமே இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. 120 பக்கங்களுக்கும் மேற்பட்ட குற்றப்பத்திரிகை மற்றும் அதன் தொடர்புடைய ஆவணங்கள் அடங்கிய 3 ஆயிரம் பக்கங்களைக் கொண்ட ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து ஆவணங்களும் இரும்பு டிரங் பெட்டியில் வைத்து நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் ஒப்படைத்தனர்.

இதையும் படிங்க:நீட் விலக்கு மசோதா விவகாரம் - ஆளுநர் ரவி மீது திமுக செய்தி தொடர்பாளர் இளங்கோவன் கடும் விமர்சனம்

Last Updated : Aug 12, 2023, 6:49 PM IST

ABOUT THE AUTHOR

...view details