சென்னை:போக்குவரத்து கழகத்தில் வேலை வாங்கி தருவதாக பணம் வாங்கிய குற்றச்சாட்டில் சட்ட விரோத பணபரிமாற்றம் நடைபெற்றிருப்பதாக கூறி அமலாக்கத்துறையினர் அமைச்சர் செந்தில் பாலாஜியை கடந்த ஜூன் 14ஆம் தேதி கைது செய்தனர். இந்த வழக்கில் புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறையினர் கடந்த ஆகஸ்ட் 7ம் தேதி காவலில் எடுத்தனர்.
கடந்த 5 நாட்களில் அவரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் சுமார் 300க்கும் மேற்பட்ட கேள்விகளை கேட்டதாக கூறப்படுகிறது. செந்தில் பாலாஜியின் வாக்குமூலம் வீடியோவாகவும், எழுத்துப்பூர்வமாக பதிவு செய்யப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இன்றுடன் (ஆகஸ்ட். 12) செந்தில் பாலாஜிக்கு நீதிமன்றக் காவல் நிறைவடைந்த நிலையில் மருத்துவ பரிசோதனை முடிந்த பின் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை அதிகாரிகள் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன்பு இன்று ஆஜர்படுத்தினர்.
இதையும் படிங்க:சாதி, இன உணர்வை தவிர்ப்பதற்காக நீதியரசர் கே.சந்துரு தலைமையில் ஒரு நபர் குழு அமைப்பு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்