சென்னை: சட்டவிரோத பணபரிமாற்றத் தடைச் சட்ட வழக்கில் கடந்த ஜூன் 14ஆம் தேதி அமலாக்கத் துறையால் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். அவரது கைது செய்தது சரியானது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்த பிறகு, ஐந்து நாட்கள் அமலாக்கத்துறை காவலில் வைத்து விசாரிக்கப்பட்டார்.
அதன்பின், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆகஸ்ட் 12ஆம் தேதி ஆஜர்படுத்தபட்டபோது, ஆகஸ்ட் 25ம் தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டது. அன்றைய தினமே, செந்தில் பாலாஜி மீது 120 பக்கங்களுக்கும் மேற்பட்ட குற்றப்பத்திரிகையும், 3 ஆயிரம் பக்கங்களை கொண்ட ஆவணங்களையும் டிரங்கு பெட்டியில் வைத்து அமலாக்கத் துறை, நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.
இதையும் படிங்க:நுங்கு பிரச்னையின் காரணமாக எழுந்த முன்விரோதத்தால் கத்தியால் தாக்கிய நபர்கள் - தீவிர விசாரணையில் போலீஸ்!
இந்த நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக அமலாக்கத் துறை தாக்கல் செய்த வழக்கை, சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள எம்.பி மற்றும் எம்.எல்.ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றி ஆகஸ்ட் 17ம் தேதி முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ். அல்லி உத்தரவிட்டிருந்தார்.
இந்த நிலையில், முதன்மை அமர்வு நீதிமன்ற உத்தரவின் படி இன்று (ஆகஸ்ட் 25) நீதிமன்ற காவல் முடிந்த நிலையில், புழல் சிறையில் இருந்து அமைச்சர் செந்தில் பாலாஜி சிறப்பு நீதிமன்ற நீதிபதி சிவக்குமார் முன்பு காணொlலி முறையில் ஆஜர்படுத்தப்பட்டார்.
இதையடுத்து செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை ஆகஸ்ட் 28ம் தேதி வரை நீட்டித்த நீதிபதி, அன்றைய தினம் செந்தில் பாலாஜியை நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்படுத்தும்படி சிறைத்துறையினருக்கு உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தார்.
இதையும் படிங்க:அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும்.. ஓபிஎஸ் மனு தள்ளுபடி!