சென்னை: தலைமைச் செயலகத்தில் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் சிறப்பு முகாமை மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ஆய்வு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், 'தமிழகத்தில் 2 கோடியே 66 லட்சம் மின் இணைப்புதாரர்கள் இருக்கின்றனர். இன்று காலை 11 மணி நிலவரப்படி 1 கோடியே 3 லட்சம் பேர் தங்களது மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்துள்ளனர்.
இதில் 51 லட்சம் பேர் ஆன்லைன் மூலமாகவும் 52 லட்சம் பேர் மின்வாரிய அலுவலகங்கள் மற்றும் சிறப்பு முகாம்கள் மூலமும் மின் இணைப்பு எண்ணுடன் தங்களது ஆதார் எண்ணை இணைத்துள்ளனர். இந்த மாதம் 31ஆம் தேதி வரை மின் இணைப்புதாரர்கள் தங்களது ஆதார் எண்ணை சிறப்பு முகாம்களிலோ அல்லது அந்தந்த மின் கோட்டை வாரிய அலுவலகங்களிலோ தங்களது மின் இணைப்பு எண்ணுடன் இணைத்துக் கொள்ளலாம்.
மேலும் 25ஆம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படுவதால் அன்றைய தினம் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கக்கூடிய அந்தப் பணியானது நடைபெறாது. ஆகையால் சென்னையில் மக்கள் கூடும் 15 இடங்களில் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதன் மூலம் பொதுமக்கள் பயன் அடைந்து வருவகின்றனர்.