தமிழ்நாடு

tamil nadu

By

Published : Sep 4, 2022, 10:28 PM IST

ETV Bharat / state

‘எனது ட்விட்டர் கணக்கு மீட்பு’ - அமைச்சர் செந்தில்பாலாஜி ட்வீட்!

தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின்‘ ட்விட்டர் கணக்கு’ இன்று காலை ஹேக் செய்யப்பட்ட நிலையில் மீண்டும் மீட்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

‘எனது ட்விட்டர் கணக்கு மீட்பு’ - அமைச்சர் செந்தில்பாலாஜி ட்வீட்!
‘எனது ட்விட்டர் கணக்கு மீட்பு’ - அமைச்சர் செந்தில்பாலாஜி ட்வீட்!

சென்னை:தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் ட்விட்டர் கணக்கில் நள்ளிரவில் ஒரு பதிவு வெளியானது. அதில், "அனைவருக்கும் வணக்கம், எங்கள் கட்சி அதன் சொந்த கிரிப்டோ வாலட்டை உருவாக்கியுள்ளது. இன்று, முன்னெப்போதையும் விட, ஆற்றல் வளர்ச்சியில் உங்கள் உதவி எங்களுக்குத் தேவை" எனப் பதிவிட்டப்பட்டிருந்தது.

அதன்பின் 2ஆவது ட்வீட்டில் கரோனாவுடன் போராடும் மக்களுக்கு உதவ $1 மில்லியன் திரட்ட விரும்புகிறோம். எனவே நாங்கள் கிரிப்டோ பணப்பைகளை உருவாக்கினோம். அனைத்து பணமும் ஹெல்பிண்டியா நிறுவனத்திற்கு அனுப்பப்படும். உதவிக்கான கிரிப்டோ முகவரிகள்" என்று பதிவிடப்பட்டிருந்தது.

அதோடு Variorius (@V_Senthilbalaji) என்று கணக்கின் பெயரும் மாற்றப்பட்டுள்ளது. இதுகுறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பினர் அந்த ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளதாகவும், இதுதொடர்பாக அந்நிறுவனத்திடம் இன்று (செப்- 4) காலை புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருப்பவர் என்பது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்வீட்டில், “அன்புள்ள அனைவருக்கும், எனது ட்விட்டர் கணக்கு இப்போது மீட்டெடுக்கப்பட்டுள்ளது. உங்கள் அக்கறைக்கும் அன்பான ஆதரவிற்கும் நன்றி. மாநில சைபர் கிரைம் பிரிவு, ட்விட்டர் அதிகாரிகள் மற்றும் அனைத்து தொழில்நுட்ப நிபுணர்களுக்கும் மிக்க நன்றி” என தெரிவித்துள்ளார்

இதையும் படிங்க:ஆர்.எஸ்.எஸ் நடவடிக்கையால் மக்கள் மத்தியில் வெறுப்புணர்வு - கே.எஸ். அழகிரி பேட்டி

ABOUT THE AUTHOR

...view details