சென்னை: தமிழகத்தில் டாஸ்மாக் விற்பனை மற்றும் மதுபான கொள்முதல் தொடர்பாக மின்சாரத் துறை மற்றும் மதுவிலக்குத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மீது தமிழக பாஜக ஐ.டி. பிரிவு தலைவர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறியிருந்தார்.
தம்மை பற்றி அவதூறு கருத்துகளை பேச நிர்மல்குமாருக்கு தடை விதிக்கக்கோரி செந்தில் பாலாஜி தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், நிர்மல்குமாருக்கு கருத்துக்களை வெளியிட தடை விதித்து உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கில் நிர்மல் குமார் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பதில் மனுவில், அமைச்சர் செந்தில் பாலாஜி முறைகேடு செய்ததற்கான போதிய ஆதாரம் உள்ளதாகவும், தனது முறைகேடுகளை மறைப்பதற்காகவே தனக்கு எதிரான இந்த வழக்கை அவர் தாக்கல் செய்துள்ளதாகவும் கூறியுள்ளார்.