தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழ்நாட்டில் இந்த ஆண்டு 500 டாஸ்மாக் கடைகள் மூடப்படும் - அமைச்சர் செந்தில் பாலாஜி - அமைச்சர் செந்தில் பாலாஜி

தமிழக சட்டப்பேரவையில் இன்று ஆயத்தீர்வை சார்பில் 9 புதிய அறிவிப்புகளும், எரிசக்தி துறையில் 31 புதிய அறிவிப்புகளையும் அமைச்சர் செந்தில் பாலாஜி வெளியிட்டார்.

ஆயத்தீர்வை சார்பில் 9 புதிய அறிவிப்புகளும், எரிசக்தி துறையில் புதிய 31 அறிவிப்புகளும் வெளியீடு
ஆயத்தீர்வை சார்பில் 9 புதிய அறிவிப்புகளும், எரிசக்தி துறையில் புதிய 31 அறிவிப்புகளும் வெளியீடு

By

Published : Apr 12, 2023, 11:00 PM IST

Updated : Apr 13, 2023, 6:57 AM IST

சென்னை:ஆயத்தீர்வை சார்பில் 9 புதிய முக்கிய அறிவிப்புகளை அமைச்சர் செந்தில் பாலாஜி
வெளியிட்டார். அவை,

1. கள்ளச்சாராயம் காய்ச்சுதல் மற்றும் கள்ள மதுபான விற்பனையில் ஈடுபட்டு மனம் திருந்தியவர்களின் மறுவாழ்வுக்கு நிதி வழங்கப்படும்.

2. மது அருந்துதலுக்கு அடிமையாகாமல் இருக்கவும் மற்றும் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுதல் மற்றும் போதை மருந்துகளை தவறான பயன்பாட்டிற்கு பயன்படுத்துவதற்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ள நான்கு கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

3. ரகசிய தகவலாளர்களுக்கு வெகுமதி தொகையை 15 லட்சத்திலிருந்து 20 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும்.

4. எரி சாராயம் போலி மதுபானம் மற்றும் பிற மாநிலங்களில் இருந்து கடத்தப்படும் மதுபான பாட்டில்கள் ஆகியவற்றை கைப்பற்றுவதில் பெரும் பங்கு வகிக்கும் காவல் அதிகாரிகளை ஊக்குவிக்கும் பொருட்டு ஊக்கத் தொகையை 15 லட்சத்திலிருந்து 20 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும்.

5. டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை கடை பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு.

6. தற்போது வழங்கப்பட்டு வரும் தொகுப்பூதியத்தினை, மேற்பார்வையாளர்களுக்கு ரூ.1,100, விற்பனையாளர்களுக்கு ரூபாய் 930, உதவி விற்பனையாளர்களுக்கு ரூபாய் 840 என மாதம் தோறும் கூடுதலாக உயர்த்தி 1.04.2023 முதல் வழங்கப்படும். இதற்காக ஆண்டொன்றுக்கு ரூபாய் 31.57 கோடி கூடுதல் செலவாகும்.

7. டாஸ்மாக் மதுபான சில்லறை 500 விற்பனை கடைகளில் கண்காணிப்பு கேமராக்கள் ரூ.16 கோடி செலவில் பொருத்தப்படும்.

8. தமிழ்நாடு மாநில வாணிபக் கழக மதுபான சில்லறை விற்பனை பணியாளர்கள் மற்றும் இதர அலுவலர்களுக்கு வழங்கப்பட்டு வரும் குடும்ப நல நிதி உதவித் தொகையை மூன்று லட்சத்திருந்து ஐந்து லட்சமாக உயர்த்தி வழங்கப்படும்.

9. தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தில் 31.3.2023 அன்று உள்ளப டி 5329 மதுபான சில்லறை விற்பனை கடைகள் செயல்பட்டு வருகின்றன. இதில் தகுதியான 500 மதுபான சில்லறை விற்பனை கடைகள் கண்டறியப்பட்டு மூடப்படும்.

மேலும் எரிசக்தி துறையில் புதிய 31 அறிவிப்புகளையும் அமைச்சர் செந்தில் பாலாஜி வெளியிட்டார்.

1. 50,000 விவசாயிகளுக்கு இலவச விவசாய மின் இணைப்புகள் வழங்கப்படும்.

2. அரசு தனியார் பங்களிப்புடன் 5,000 மெகா வாட் காற்றாலை மின் உற்பத்தி நிலையங்கள் நிறுவுதல்.

3. சென்னை மாநகரில் குறுகிய இடத்திற்குள், பராமரிப்பு பணிகள் தேவையற்ற புதிய 3,311 கிலோ வாட் துணை மின் நிலையங்கள் நிறுவுதல்.

4. 33 கிலோ வாட் 11 கிலோ வாட் மற்றும் தாழ்வழித்த புதைவிடங்களில் ஏற்படும் பழுதுகளை உடனுக்குடன் கண்டறிவதற்காக புதைவட சோதனை கருவியுடன் இணைந்த பரிசோதனை வாகனம் கொள்முதல் செய்யப்படும்.

5. 72 புதிய துணை மின் நிலையங்கள் நிறுவப்படும்.

6. 57 துணை மின் நிலையங்களில் உள்ள மின் மாத்திரைகளின் திறனை மேம்படுத்துதல்.

7. துணை மின் நிலையங்களில் புதிய 33 கிலோ வாட், 22 கிலோ வாட் மற்றும் 11 கிலோ நிரந்தர காந்த இயக்க வெற்றிட மின்சுற்றி பிரேக்கர்கள் நிறுவப்படும்.

8. தமிழ்நாட்டின் முக்கியமான நகரங்களில் செல்லும் மேல்நிலை மின் கம்பிகளை புதைவிடங்களாக மாற்றுதல் சென்னை மாநகராட்சி பகுதிகளில் செல்லும் மேல்நிலை மின் கம்பிகளை மாற்றி அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதை தொடர்ந்து கூடுதலாக கோயம்புத்தூர், மதுரை மற்றும் கரூர் நகராட்சிகளின் பகுதிகளில் செல்லும் மேல்நிலை மின் கம்பிகளை புதைவிடங்களாக மாற்றி அமைக்கும் பணிகள் தொடங்கப்படும்.

9. வடசென்னை அனல் மின் நிலையம் ஒன்றில் செயல் திறனை மேம்படுத்துவதற்கான ரூபாய் 58.18 கோடி திட்ட மதிப்பீட்டில் சிறப்பு பணிகளை மேற்கொள்ளுதல்.

10. வடசென்னை அனல் மின் நிலையம் இரண்டின் செயல் திறனை மேம்படுத்துவதற்கான ரூபாய் 95.90 கோடி திட்ட மதிப்பீட்டில் சிறப்பு பணிகளை மேற்கொள்ளுதல்.

11. தூத்துக்குடி அனல் மின் நிலையத்தின் செயல் திறனை மேம்படுத்துவதற்கான பணிகளை மேற்கொள்ளுதல்.

12. மேட்டூர் அனல் மின் நிலையம் 1ன் செயல் திறனை மேம்படுத்துவதற்காக ரூபாய் 12.55 கோடி திட்ட மதிப்பீட்டில் பல்வேறு வகையான சிறப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும்.

13. மேட்டூரில் செயல்பட்டு வரும் 1×600 மெகாவாட் திறன் கொண்ட மேட்டூர் அனல் மின் நிலையம் 2ன் திறனை மேம்படுத்துவதற்காக ரூபாய் 9.13 கோடி திட்ட மதிப்பீட்டில் சிறப்பு பணிகள் மேற்கொள்ளப்படும்.

14. எண்ணூர் சிறப்பு பொருளாதார மண்டல அனல் மின் நிலையத்திற்காக இரண்டு நிலக்கரி கையாளும் இயந்திரங்கள் சென்னை காமராஜர் துறைமுகத்தில் நிறுவப்படும்.

15. மோயார் புனல் மின் நிலையத்தின் பழமை வாய்ந்த உயர் அழுத்த நீர் எடுத்துச் செல்லும் குழாய்கள் மாற்றி அமைக்கப்படும்.

16. கீழ் மேட்டூர் கதவனை மின் நிலையம் 1ற்காக ஆகாயத்தாமரை மற்றும் திடக்கழிவுகளை அகற்றுவதற்காக சுத்தம் செய்யும் இயந்திரம் ரூபாய் 6.95 கோடி திட்ட மதிப்பீட்டில் கொள்முதல் செய்யப்படும்.

17. பில்லூர் நிராலப்பள்ளம் திருப்புவணை பாபநாசம் திருப்பாலை மற்றும் அவலாஞ்சி ஆகிய நான்கு அணைகளில் ரூபாய் 78.25 கோடி மதிப்பீட்டில் உலக வங்கியின் நிதி உதவியுடன் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும்.

18. தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு சொந்தமான மாநில மின் பகிர்ந்தலைப்பு மையமானது மிகவும் பழைய கட்டிடத்தின் தரைதளத்தில் இயங்கி வருகிறது. இதனை அதிநவீன தொழில்நுட்ப வசதியுடன் கூடிய புதிய கட்டுப்பாட்டு அறை மற்றும் இட வசதியுடன் கூடிய மின் பயிர்ந்தரிப்பு மையமாக மாற்றுவதற்கு, தற்போது செயல்பட்டு வரும் இடத்திலிருந்து தமிழ்நாடு மின் தொடர் அமைப்பு கழகக் கட்டிடத்தின் மூன்றாவது தளத்திற்கு சுமார் ரூபாய் 4 கோடி திட்ட மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளப்படும்.

19. தமிழ்நாடு மாநில மின் பகிர்ந்தலைப்பு மையத்திற்கு என தனியாக தகவல் தொழில்நுட்ப பிரிவு எவ்வித கூடுதல் செலவினமின்றி நடைபாண்டில் உருவாக்கப்படும்.

20. மின்னல் தடுப்பான்களில் ஏற்படும் பழுதுகளை குறைப்பதற்கு 3வது ஹார்மோனிக் மின்னல் தடுப்பான் சோதனை கருவி நடப்பாண்டில் கொள்முதல் செய்யப்படும்.

21. அதிக உயிரெழுத்து மற்றும் கூடுதல் உயிரெழுத்த மின் வழித்தடங்களில் ஏற்படும் பழுதுகளை மின்தடங்கள் எதுவும் இன்றி கண்டறிவதற்கு டிராவலிங் வேவ் ஃபால்ட் லொகேட்டர் எனும் புதிய நவீன கருவி நடைபாண்டில் கொள்முதல் செய்யப்படும்.

22. மிக உயிரழுத்த மின் வழித்தடங்களில் மின் தடையின்றி மின்னோட்டம் உள்ள போதே பழுது நீக்குதல் மற்றும் பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதற்காக புதிய இன்சுலேட்டட் ஏரியல் பக்கெட்டுடன் கூடிய வாகனம் கொள்முதல் செய்யப்படும்

23. அதி உயர் அழுத்தம் கொண்ட மின் பாதைகளில் ஏற்படும் பழுதுகளை கண்டறிவதற்கு அதிக திறன் கொண்ட கேமராவுடன் கூடிய ட்ரோன்கள் கொள்முதல் செய்யப்படும்.

24. அதி உயர் அழுத்த மின் பாதையில் குறைபாடுள்ள இன்சுலேட்டர்கள் மற்றும் ஜம்பர்களை கண்டறிவதற்காக 30 எண்ணம் இன்ஃப்ரா ரெட் தெர்மல் இமேஜிங் கேமரா மற்றும் ஒரு எண்ணம் கரோனா டிஸ்சார்ஜ் கேமரா கொள்முதல் செய்யப்படும்.

25. வளிம காப்பு துணை மின் நிலைய பராமரிப்பு பணிகளின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு கொரட்டூரில் இயங்கி வரும் பராமரிப்பு உபகோட்டத்துடன் கூடுதலாக கிண்டியில் மேலும் ஒரவளிம காப்பு பராமரிப்பு உபகோட்டம் உருவாக்கப்படும்.

26. கரூர் மற்றும் தஞ்சாவூர் மண்டலங்களுக்கு இரண்டு புதிய மின் இயக்க வட்டங்கள் உருவாக்கப்படும். (ஒவ்வொரு மின் பகிர்மான மண்டலத்திற்கும் ஒரு மின் இயக்க வட்டம் என்ற அடிப்படையில் புதிதாக துவங்கப்பட்ட கரூர் மற்றும் தஞ்சாவூர் மின் பகிர்மான மண்டலங்களுக்காக இரண்டு புதிய இயக்குதல் வட்டங்கள் கரூர் மற்றும் தஞ்சாவூரை தலைமை இடமாக கொண்டு மறு சீரமைப்பு முறையின் கீழ் உருவாக்கப்படும்).

27. ஒரே மின்னுட்டி வசதியுடன் கூடிய 60 எண்ணிக்கையிலான 110 கிலோ ஓட் துணை மின் நிலையங்களுக்கு இரண்டாவது மின் பாதை அமைக்கப்படும்.

28. திருவலம் மற்றும் நெய்வேலியில் இரண்டு புதிய கருவிகார்த்தல் மற்றும் தகவல் தொடர்பு வட்டங்கள் கூடுதல் செலவு இன்றி உருவாக்கப்படும்.

29. சிங்க ரேனி நிலக்கரி நிறுவனத்தின் சுரங்கங்களில் இருந்து ரயில் தொடர் வண்டி மூலம் கொண்டு வரப்படும் நிலக்கரியை ரயில் பெட்டிகளில் இருந்து அப்படியே இறக்குவதற்காக வடசென்னை அனல்மின் நிலையம் 1 வளாகத்தில் புதிய வேகன்ட் டிப்ளர் இயந்திரம் நிறுவுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

30. திருநெல்வேலி, ஸ்ரீரங்கம், கோயம்புத்தூர், அவிநாசி, திருப்பரங்குன்றம், திருச்செங்கோடு, கரூர் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய ஊர்களில் அமைந்துள்ள தேரோடும் மாட வீதிகளில் செல்லும் மேல்நிலை மின் கம்பிகளை புதைவடங்களாக மாற்றி அமைக்கப்படும்.(இத்திருத்தலங்களில் நடைபெறும் தேரோட்டத்தின்போது பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை புரிவதால், இவ்வாறு மேல்நிலை மின் கம்பிகளை புதைவடங்களாக மாற்றி அமைப்பதன் மூலம் பொது மக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்குவதுடன் மின்விபத்துகளும் முற்றிலும் தடுக்கப்படும்).

31. தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமையால் தமிழ்நாடு புதுமை முயற்சி முகமையின் நிதி உதவி மூலம் தலைமைச் செயலக வளாகம் சென்னை மற்றும் பள்ளிக்கல்வி இயக்குநரகம் சென்னை ஆகிய இடங்களில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக 100 கிலோ வாட் திறன் கொண்ட இரண்டு சூரிய சக்தியின் மூலம் இயங்கும் வாகன மின்னூட்டல் நிலையங்கள் ரூபாய் 1.50 கோடி மதிப்பீட்டில் நிறுவப்படும்.

இதையும் படிங்க:நாட்டில் இதுவரை இல்லாத அளவிற்கு ஸ்மார்ட் மீட்டர் அறிவிப்பு - அமைச்சர் செந்தில் பாலாஜி

Last Updated : Apr 13, 2023, 6:57 AM IST

ABOUT THE AUTHOR

...view details