சென்னை:தலைமைச் செயலகத்தில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ஏற்கெனவே ஒரு லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும், சென்னையில் மின் புதைவட கம்பிகள் பதிக்கும் பணி இரண்டு மண்டலங்களில் முடிவுற்று உள்ளதாக தெரிவித்தார்.
வடசென்னை அனல் மின் நிலைய மூன்றாவது அலகு 800 மெகாவாட் திட்டம் டிசம்பர் மாதத்தில் முடிவடையும் என்று கூறினார். எண்ணூரில் இரண்டு மற்றும் மூன்றாவது அலகு ஆயிரத்து 320 மெகாவாட் திட்டமானது 2024ஆம் ஆண்டு மார்ச் மற்றும் ஜூன் மாதத்தில் முடிக்கத்திட்டமிட்டு உள்ளதாகவும் அமைச்சர் செந்தில் பாலாஜி குறிப்பிட்டார்.