சென்னை:அயலகத் தமிழர் தினத்தில் கலந்துகொள்ள விரும்புபவர்கள் தங்களது பெயரினை பதிவு செய்யும் பொருட்டு, அதற்கான வசதியினை "அயலகத் தமிழர்" நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை ஆணையரகத்தின் வலைதளத்தை ( https://nrtamils.tn.gov.in ) சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் கே. எஸ். செஞ்சி மஸ்தான் நேற்று தொடங்கி வைத்தார்.
பின்னர் இதுகுறித்துப் பேசிய அமைச்சர் செஞ்சி மஸ்தான், 'புலம்பெயர்ந்த தமிழர்கள், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு ஆற்றி வரும் பங்களிப்பினை சிறப்பிக்கும் வகையில் ஆண்டுதோறும் ஜனவரி 12, அன்று "அயலகத் தமிழர் தினம் " கொண்டாடப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன் அடிப்படையில், வரும் 11.01.2023 மற்றும் 12.01.2023, இரண்டு நாட்கள் "அயலகத் தமிழர் தினம் 2023" சென்னை கலைவாணர் அரங்கில் கொண்டாடப்பட உள்ளது.
இத்தினத்தில் கலந்துகொள்ள விரும்புபவர்கள் தங்களது பெயரினை பதிவு செய்ய விருப்பம் உள்ளவர்களுக்கு இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இருந்து வெளிநாட்டுக்கு வேலைக்குச் செல்பவர்களின் விவரங்களைப் பதிவு செய்ய புதிய மொபைல் ஆப்பை, வருகின்ற ஜனவரி மாதம் முதலமைச்சர் ஸ்டாலின் துவங்கி வைக்கிறார்.
முதலமைச்சர் ஸ்டாலின், பல்வேறு நலத்திட்டங்கள் அடங்கிய அறிவிப்பை வெளியிட உள்ளார். மேலும் அதில் பதிவு செய்துவிட்டு வெளிநாடு செல்லும் பட்சத்தில் ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால், தமிழ்நாடு அரசு அவர்களை உடனடியாக மீட்பதற்கு சுலபமாக இருக்கும்.