சென்னை:உலமாக்கள் மற்றும் பணியாளர் நல வாரியத்தில் பதிவு பெற்ற உறுப்பினர்களுக்கு விபத்து மரணத்திற்கான உதவித்தொகை ஒரு லட்சத்திலிருந்து ரூபாய் ஒரு லட்சத்து 25 ஆயிரம் ஆக உயர்த்தி வழங்கப்படும் என்கின்ற 12 அறிவிப்புகளை பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில், அமைச்சர் செஞ்சி மஸ்தான் பேரவையில் அறிவிப்புகளை வெளியிட்டார்.
உலமாக்களுக்கு விபத்து மரணத்திற்கான உதவித்தொகை ரூ.1 லட்சத்து 25 ஆயிரம் ஆக உயர்வு! - சிறுபான்மையினர் நலத்துறை
பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் 12 அறிவிப்புகளை அமைச்சர் செஞ்சி மஸ்தான் சட்டப்பேரவையில் வெளியிட்டார்.
1. ஏழ்மை நிலையில் உள்ள சிறுபான்மையினருக்கு 2500 விலையில்லா மின் மோட்டோருடன் கூடிய தையல் இயந்திரங்கள் ஒரு கோடியே 60 லட்சம் ரூபாய் செலவில் வழங்கப்படும்.
2. உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற உறுப்பினர்களுக்கு இயற்கை மரணத்திற்கான உதவித்தொகை 20ஆயிரத்திலிருந்து 30,000ஆக உயர்த்தி வழங்கப்படும்.
3. உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரிய உறுப்பினர்களின் ஆறாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவியருக்கு ஆயிரம் ரூபாய் கல்வி உதவித்தொகை வழங்கப்படும்.
4. உலமாக்கள் மற்றும் பணியாளர் நல வாரியத்தில் பதிவுபெற்ற உறுப்பினர்களுக்கு விபத்து மரணத்திற்கான உதவித்தொகை ஒரு லட்சத்திலிருந்து ரூபாய் ஒரு லட்சத்து 25 ஆயிரம் ஆக உயர்த்தி வழங்கப்படும்.
5. சென்னை மற்றும் கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களில் 81 லட்சத்து 68 ஆயிரம் ரூபாய் செலவில் இரண்டு புதிய சிறுபான்மையினர் கல்லூரி மாணவர் விடுதிகள் துவங்கப்படும்.
6. கபர்ஸ்தான் மற்றும் அடக்கஸ்தலங்களுக்கு ஒரு கோடி ரூபாய் செலவில் புதிதாக சுற்றுச்சுவர் அமைக்கப்படும் மற்றும் புனரமைக்கப்படும் அமைக்கப்படும்.
7. சொந்த கட்டடத்தில் இயங்கும் சிறுபான்மையினர் விடுதிகளுக்கு சிறப்பு பராமரிப்பு மற்றும் பழுது பார்ப்பு பணிகள் மேற்கொள்ள ஒரு கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
8. சென்னை மாவட்டம், ராயப்பேட்டையில் ஒரு சிறுபான்மையினர் கல்லூரி மாணவியர் விடுதிக்கு 6 கோடியே 7 லட்சத்தி 75 ஆயிரம் ரூபாய் செலவில் சொந்த கட்டடம் கட்டப்படும்.
9. கோயம்புத்தூர் மற்றும் திருச்சி மாவட்டங்களில் கூடுதலாக தலா ஒரு முஸ்லிம் மகளிர் உதவி சங்கம் இரண்டு லட்சம் ரூபாய் செலவில் புதிதாக துவங்கப்படும்.
10. கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டிகள் தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையம் மூலம் ஒரு கோடி ரூபாய் செலவில் நடத்தப்படும்.
11. அனைத்து மாவட்டங்களிலும் கொண்டாடப்படும் சிறுபான்மையினர் உரிமைகள் தினத்திற்கு வழங்கப்பட்டு வரும் தொகை ரூ.2000லியிருந்து 10 ஆயிரம் ஆக மூன்று லட்சத்து 4 ஆயிரம் ரூபாய் செலவில் உயர்த்தப்படும்.
12. தமிழ்நாடு வக்பு வாரியத்திற்குச் சொந்தமான சொத்துகளை அளவை செய்வதற்காகவும் மற்றும் 11 மண்டல அலுவலகங்களில் 11 கணினிகள் மற்றும் 11 ஸ்கேனர்கள் கூடிய நகலெடுக்கும் இயந்திரங்கள் வாங்கவும் 2 கோடி ரூபாய் வழங்கப்படும்.
இதையும் படிங்க:போலி வீடியோ விவகாரம் - பகை வளர்க்கமாட்டேன் என தூத்துக்குடியில் உறுதி கொடுத்த உ.பி. பாஜக நிர்வாகி