பள்ளிக் கல்வித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் சட்டப்பேரவையில் பேசிய திமுக உறுப்பினர் பொன்முடி, "திமுக ஆட்சி காலத்தில் 58 ஆயிரம் ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத பணியாளர்களை மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நிரந்தரம் செய்தார். ஆனால், அதிமுக ஆட்சியில் நியமிக்கப்பட்ட பகுதிநேர ஆசிரியர்கள் 12 ஆயிரம் பேர் நிரந்தரம் செய்யப்படாதது ஏன் என்று கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து பேசிய பொன்முடி , போராட்டத்தில் ஈடுபட்ட ஜாக்டோ-ஜியோ ஊழியர்கள் ஐந்து ஆயிரம் பேர் மீது 17 (பி) பிரிவின் கீழ் எடுக்கப்பட்ட நடவடிக்கையை திரும்பப் பெற வேண்டும் என்றும் மாணவர்கள் இடைநிற்றல் விகிதம் அதிகமாக இருப்பது மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட புள்ளிவிவரங்கள் மூலம் தெரியவந்துள்ளது" என்றும் தெரிவித்தார்.