அரசுப் பள்ளிகளில் தொடக்கப் பள்ளியை நடுநிலை பள்ளியாக, நடுநிலை பள்ளியை உயர்நிலை பள்ளியாக, உயர்நிலைப் பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக தமிழ்நாடு அரசு தரம் உயர்த்தியுள்ளது. தற்போது மாணவர்கள் சேர்க்கைக்கேற்ப பள்ளிகளின் தரம் உயர்த்தப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
கசடு கழிவு மேலாண்மை திட்டம்:
மேலூர் மாவட்டத்தில் கசடு கழிவு மேலாண்மை திட்டம் ஏப்ரல் மாதத்தில் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும் என உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கூறியுள்ளார்.
சட்டப்பேரவையில் வினா - விடை நேரத்தின்போது மேலூர் நகராட்சியில் பாதாள சாக்கடைத் திட்டத்தை செயல்படுத்த அரசு ஆவன செய்யுமா என மேலூர் சட்டபேரவை உறுப்பினர் பெரியபுள்ளான் கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த எஸ்.பி. வேலுமணி, இடவசதி காரணமாகவே நகராட்சிகள், பேரூராட்சிகளில் பாதாள சாக்கடைத் திட்டம் செயல்படுத்தப்படவில்லை என்றும், அதற்கு மாற்றாக கசடு கழிவு மேலாண்மைத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாகவும் கூறினார்.
கசடு கழிவு மேலாண்மைத் திட்டப் பணிகள் நடைபெற்று வருவதாகக் கூறிய அவர், ஏப்ரல் மாதத்திற்குள் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என உறுதியளித்தார்.
இதையும் படிங்க:'40 லட்சம் ரூபாய் வாங்கிக் கொண்டு மிரட்டும் எம்எல்ஏ இன்பதுரை'