தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

செங்கோட்டையன் அளித்த உறுதி; போராட்டத்தைக் கைவிட்ட ராமதாஸ்! - போன் உரையாடலில் பேசியது என்ன? - பாமகவின் தொடர்முழக்கப் போராட்டம் ரத்து

சென்னை: பொதுத்தேர்வுகளைக் கைவிடுவது தொடர்பாக அமைச்சர் செங்கோட்டையன் உறுதியளித்ததைத் தொடர்ந்து, பாமக நடத்தவிருந்த போராட்டம் ரத்து செய்யப்படுள்ளது.

Minister Sengottaiyan affirms - PMK party abandons the agitation
Minister Sengottaiyan affirms - PMK party abandons the agitation

By

Published : Jan 27, 2020, 12:06 PM IST

5, 8ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகளை அரசு ரத்து செய்யாவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என்று பாமக எச்சரித்திருந்த நிலையில், தமிழ்நாடு அரசு பரிசீலிக்கும் என அமைச்சர் செங்கோட்டையன் உறுதியளித்துள்ளார். இதைத் தொடர்ந்து, பாமக சார்பில் நாளை நடக்கவிருந்த போராட்டம் ரத்து செய்யப்படுவதாக அக்கட்சி தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக பாமக தலைவர் ஜி.கே. மணி வெளியிட்டுள்ள அறிக்கையில், ”ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களைச் சேர்ந்த மாணவ, மாணவியரின் கல்வியைக் கடுமையாகப் பாதிக்கும் 5, 8ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி நாளை (28/01/2020) தமிழ்நாடு முழுவதும் மாவட்ட மற்றும் வட்டத் தலைநகரங்களில் தொடர்முழக்கப் போராட்டம் நடத்தப்படும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவித்திருந்தார்.

அதைத் தொடர்ந்து தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் இன்று காலை தொலைபேசியில் தொடர்புகொண்டு ராமதாஸிடம் பேசினார். 5, 8ஆம் வகுப்புகளுக்குப் பொதுத்தேர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள போதிலும், அத்தேர்வு முடிவின் அடிப்படையில் முதல் 3 ஆண்டுகளுக்கு மாணவர்களின் தேர்ச்சியை நிறுத்திவைக்க வேண்டாம் என்று அரசு ஆணையிட்டிருப்பதாகவும், இதுகுறித்து அரசாணையிலேயே குறிப்பிடப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார். அதையேற்று நாளை பாமக நடத்தவிருக்கும் போராட்டத்தை கைவிட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

5, 8ஆம் வகுப்புகளுக்குப் பொதுத்தேர்வுகளை முழுமையாக ரத்து செய்வது மட்டும் தான் இந்தச் சிக்கலுக்கு தீர்வாக இருக்கும் என்றும், இந்த விஷயத்தில் தான் உறுதியாக இருப்பதாகவும் ராமதாஸ் கூறினார். மேலும் பொதுத்தேர்வை கைவிடும்படியும் அவர் கேட்டுக்கொண்டார். அதையேற்றுக்கொண்ட அமைச்சர் 5, 8ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகளை அடுத்த ஆண்டு முதல் கைவிடுவது குறித்து அரசு பரிசீலிக்கும் என்று உறுதியளித்தார். அவரின் இந்த வாக்குறுதியை ஏற்று நாளை நடைபெறுவதாக இருந்த தொடர்முழக்கப் போராட்டம் கைவிடப்படுகிறது” என அதில் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: 5,8ஆம் வகுப்பு பொதுத்தேர்வு - கைவிட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்!

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details