தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பண்பாடு, கலாச்சாரம் பாதுகாக்க சிறப்பு வகுப்புகள் - அமைச்சர் செங்கோட்டையன் - தமிழ்நாடு அரசு சிறப்பு செய்திகள்

சென்னை: விடுமுறை நாட்களில் ஓய்வுபெற்ற தமிழாசிரியர்களை கொண்டு பண்பாடு, கலாச்சாரம் பாதுகாக்கும் வகையில் இரண்டு மணி நேரம் வகுப்பு எடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

minister sengottaiyan

By

Published : Sep 26, 2019, 3:38 PM IST

தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேசியதாவது,

"தமிழகத்தின் ஒவ்வொரு துறையும் இந்தியாவிற்கே வழிகாட்டியாக திகழ்கிறது.

விடுமுறை நாட்களில் ஒய்வுபெற்ற தமிழாசிரியர்களை கொண்டு பண்பாடு, கலாச்சாரம் பாதுகாக்கும் வகையில் இரண்டு மணி நேரம் வகுப்பு எடுக்க பரிசீலனையில் இருக்கிறது.

தமிழ் ஆசிரியர் பற்றாக்குறை தொடர்பாக கர்நாடக முதலமைச்சர் கடிதம் எழுதினால் நடவடிக்கை எடுக்கப்படும். விரைவில் தொன்மை வாய்ந்த 5000 நூல்கள் பின்லாந்திற்கு அனுப்பப்படும்.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர் சந்திப்பு

ஒய்வு பெற்ற ஆசிரியர் அந்த பள்ளியிலே பணியாற்ற விரும்பினால் அனுமதி வழங்கப்படும். சிறந்த ஆசிரியர்கள் தேர்வு செய்வதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அடுத்த ஆண்டு முதல் மாணவர்களுக்கு காலணிக்கு பதில் ஷூ வழங்கப்படும். பள்ளி தொடங்கியவுடனேயே சீருடைகள் வழங்கப்படும்.

5,8 வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு 3 ஆண்டுகளுக்குப் பிறகே அமல்படுத்தப்படும்" எனக் கூறினார்.

இதையும் பார்க்க : ’பள்ளி திறந்த முதல் நாளிலே இரண்டாம் பருவ பாடப்புத்தகம் வழங்க வேண்டும்’

ABOUT THE AUTHOR

...view details