சமையலுக்கு மிகமிக அத்தியாவசிய பொருட்களில் ஒன்றான வெங்காயத்தின் விலை மிக வேகமாக உயர்ந்து வருகிறது. இதனால் நடுத்தர மக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை கோயம்பேடு மார்கெட்டில் ஒரு கிலோ வெங்காயம் 120 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இந்த தொடர் விலை ஏற்றத்தை கட்டுப்படுத்த மாநில அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், வெங்காய வியாபாரிகள் 10 டன்னுக்கு மேல் வெங்காயத்தை பதுக்கினால் நடவடிக்கை எடுக்கப்படும் என ஏற்கனவே எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது. இருந்தும் வெங்காயத்தின் விலை மளமளவென உயர்ந்துகொண்டே சென்றது. பண்ணை பசுமை கடைகளில் 33 ரூபாய்க்கு ஒரு கிலோ வெங்காயம் விற்பனை செய்யப்பட்டு வருவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
அமைச்சர் செல்லூர் ராஜூ ட்வீட் இன்று கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, தமிழகத்தில் மொத்த விற்பனை கடைகளில் 50 டன்னுக்கும் மேல் இருப்பு வைக்கக்கூடாது என்றும், வெங்காய பதுக்கலில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிக்க முடியாது எனவும் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: 100 ரூபாயாக உயர்ந்த வெங்காயத்தின் விலை!