சென்னை:பாரிமுனையில் உள்ள கச்சாலீஸ்வரர் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு நேற்று (ஆக.11) ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், "கோயில்களில் அன்னை தமிழில் அர்ச்சனை என்பது சிறப்பான வரவேற்பைப் பெற்றுள்ளது.
அனைத்து தரப்பிலிருந்தும் பாராட்டுகள் வந்துகொண்டிருக்கின்றன. கோ சாலைகள், குளங்கள், தேர்கள் போன்றவற்றை பராமரிக்க வேண்டும். இது குறித்தான குறைகளை நிவர்த்தி செய்ய உள்ளோம். இதுவரை 80 கோயில்களில் ஆய்வு செய்யப்பட்டுள்ளது.
207 புதிய அர்ச்சகர்கள்
திருக்கோயில்களில் ஆய்வு செய்து, குடமுழுக்குப் பணிகளை தொடங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அனைத்து சாதியினரும் அர்ச்சகர்கள் ஆகலாம் என்ற திட்டத்தின்படி 207 பேர் பயிற்சி பெற்றுள்ளனர்.