சென்னை: இது தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு வெளியிட்டுள்ள அறிக்கையில், 'கடந்த சட்டப்பேரவை மானியக் கோரிக்கையின்போது, கோயில்களின் பாதுகாப்பிற்கென 10 ஆயிரம் பாதுகாப்புப் பணியாளர்கள் நியமனம் செய்யப்படுவார்கள் என அறிவிப்பு வெளியிடப்பட்டது.
தேவையான பணியாளர்கள் குறித்து ஆய்வு
மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில், பழநி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில், சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில், திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயில், திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், மயிலாப்பூர் அருள்மிகு கபாலீசுவரர் திருக்கோயில் உட்பட 47 திருக்கோயில்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக திருக்கோயில் வாரியாக, எத்தனை பாதுகாப்புப் பணியாளர்கள் பாதுகாப்புக்குத் தேவை என கணக்கெடுக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
முறையான பயிற்சிகள் அளிக்கப்பட்டு பணியாளர் நியமனம்