சென்னை:தஞ்சாவூர் மாவட்டம் களிமேடு கிராமத்தில் உள்ள அப்பர் கோயிலில் இன்று (ஏப்.27) அதிகாலை நடந்த சித்திரை தேரோட்ட விழா நடந்தது. அப்போது தேர் உயர் அழுத்த மின் கம்பி மீது மோதியதில் 11 பேர் உயிரிழந்தனர். பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
திமுக, அதிமுக சார்பில் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே முதலமைச்சர் ஸ்டாலின், அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
முன்னதாக, தமிழ்நாடு சட்டப் பேரவையில் தஞ்சாவூர் தேர் திருவிழா விபத்து குறித்து, சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது. அப்போது பேசிய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, "தமிழ்நாடு அரசுக்கு தெரிவிக்காமல் தஞ்சையில் தேர் திருவிழா நடந்தது.
வரும் காலத்தில் இம்மாதிரியான சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க திருவிழாக்கள் எங்கெல்லாம் நடக்கிறதோ, அங்கு மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோருடன் கலந்து ஆலோசித்து போதிய ஏற்பாடுகளும், பாதுகாப்பும் வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: தஞ்சை தேர் விபத்து நடந்தது எப்போது? - அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்