சென்னை :Minister Sekar Babu speech:துறைமுகம் சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட பிரகாசம் சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை, அரசு பல்மருத்துவக் கல்லூரி மாணவர் விடுதி, மற்றும் நடைபாதைப் பூங்கா ஆகியவற்றை அந்த தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினரும், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சருமான பி.கே. சேகர்பாபு நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர் பாபு கூறியதாவது, "கடந்த மாதம் பெய்த பெரு மழையினால் ஏற்பட்ட பாதிப்புகளை முதலமைச்சர் ஸ்டாலின் தொடர்ந்து 40 நாட்களாக நேரில் சென்று பார்வையிட்டார். பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான நிவாரண நடவடிக்கைகளையும் மேற்கொண்டார்.
நீண்ட நெடிய பாரம்பரியமிக்க கல்லூரி
அடுத்து வரும் காலத்திற்குள், தற்பொழுது ஏற்பட்ட பாதிப்புகள் மீண்டும் ஏற்படாத வண்ணம் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள எங்களுக்கும், அலுவலர்களுக்கும் உத்தரவிட்டுள்ளார். அதன் அடிப்படையில் துறைமுகம் சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட பிரகாசம் சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை, ஆகியப் பகுதிகளில் உள்ள மழைநீர் வடிகால் வாய்க்கால்களை தற்போது பார்வையிட்டோம், இங்குள்ள பூங்கா, பொதுக்கழிப்பிடமாக மாறி, புதர்மண்டி கிடக்கிறது.
மேலும், கட்டட இடிபாடுகளும் குப்பைகள் குவிந்து இருப்பது குறித்து பல் மருத்துவக் கல்லூரி முதல்வர் அவர்களும், மாணவ, மாணவிகளும் அளித்தப் புகாரின் அடிப்படையில் அதனையும் பார்வையிட்டோம். இந்த குறைபாடுகள் மாநகராட்சியால் இரண்டு நாளில் நிச்சயம் சரி செய்யப்படும்.
இங்கு உள்ள அரசு பல் மருத்துவக்கல்லூரி நீண்ட நெடிய பாரம்பரியமிக்க கல்லூரியாகும். இங்குள்ள மாணவ - மாணவிகள் தங்கும் உண்டு- உறைவிடத்தில் 380 மாணவிகளும், 105 மாணவர்களும் தங்கிப் பயின்று வருகின்றனர். இந்த விடுதி 1980ஆம் ஆண்டு கட்டப்பட்டது.
ஸ்டாலினிடம் வேண்டுகோள் வைக்க உள்ளேன்
தற்பொழுது இந்த விடுதியைப் புனரமைப்பது குறித்து பொதுப்பணித்துறை அமைச்சர் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் ஆகியோரின் ஒத்துழைப்புடன் இங்குத் தங்கியுள்ள ஒவ்வொரு மாணவர்களுக்கும் தலா 100 சதுர அடியுடன் அனைத்து அடிப்படை வசதிகளும் கொண்ட உண்டு உறைவிட விடுதி அமைத்திட முதலமைச்சர் ஸ்டாலினிடம் தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினர் என்ற அடிப்படையில் வேண்டுகோள் வைக்க உள்ளேன்.
மேலும், அரசு ராஜிவ் காந்தி பொது மருத்துவமனையிலும் நோயாளிகளுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தும் புனரமைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு முதலமைச்சர் ஸ்டாலின் அரசு ராஜிவ் காந்தி பொது மருத்துவமனையில் ஒமைக்ரான் நோய்க்குச் சிகிச்சை அளித்திடச் சிறப்பு வார்டினை திறந்து வைத்தார்.
தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும்...