தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கோயில்களில் நாளை வழிபாட்டுக்குத் தடை - அமைச்சர் சேகர் பாபு - chennai latest news

கரோனா பரவல் அச்சம் காரணமாக நாளை (ஆக.11) ஆடி பூரம் தினத்தன்று, அறநிலையத்துறைக்கு சொந்தமான கோயில்களில் பக்தர்கள் வழிபடத் தடை விதிக்கப்படுவதாக அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.

By

Published : Aug 10, 2021, 10:42 PM IST

சென்னை: நாளை ஆடி பூரம் கொண்டாடப்படவிருப்பதால் மக்கள் அதிகமாக கோயில்களில் கூட வாய்ப்புள்ளது. இதனை முன்னிட்டு கோயில் வழிபாடு தொடர்பாக, அமைச்சர் சேகர் பாபு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில், “தமிழ்நாட்டில் கரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக, நாளை (ஆக. 11) ஆடி பூரம் கொண்டாடப்படுவதால் மக்கள் அதிகமாக கோயில்களில் கூடக் கூடும். இதனால் நாளை (ஆக.11) இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான திருகோயில்களில் பக்தர்கள் வழிபாட்டுக்கு தடை விதிக்கப்படுகிறது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏற்கனவே ஆடி அமாவாசைக்கு கோயில்களில் பக்தர்கள் வழிபாட்டிற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் ஆகம விதிப்படி அனைத்து பூஜைகளும் நடைபெறும் எனவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:எஸ்.பி. வேலுமணி தொடர்பான இடங்களில் ரூ. 13 லட்சம் பறிமுதல்

ABOUT THE AUTHOR

...view details