சென்னை:இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தலைமையில் 47 திருக்கோயில்களில் உள்ள மூத்த அர்ச்சகர்கள், செயல் அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டம் நுங்கம்பாக்கம் இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்தில் இன்று மாலை நடைபெற்றது.
திருக்கோயில்களில் மேற்கொள்ளப்படும் பணிகள், கோயில்களில் இருக்கும் காலி பணியிடங்கள், அன்னை தமிழில் அர்ச்சனை, அனைத்து சாதியினர் அர்ச்சகர் திட்டம் ஆகியவை குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
இதில் பேசிய அமைச்சர் சேகர் பாபு, "யாருக்கும் எந்த பாதிப்பும் வராத படி இந்து சமய அறநிலையத்துறையின் செயல்பாடுகள் இருக்கும். அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் திட்டத்தின்படி கோயில்களில் உள்ள காலிப் பணியிடங்களில் மட்டுமே புதிய அர்ச்சகர்கள் நியமிக்கப்படுகிறார்கள்.
ஆகம விதிப்படி பயிற்சி முடித்த அர்ச்சகர்கள் நியமனம் செய்யப்படுகிறார்கள். ஏற்கெனவே பணியில் இருக்கும் அர்ச்சகர்கள் நீக்கப்படவில்லை. ஓய்வு பெறாத அர்ச்சகர்கள் பணியில் இருந்து நீக்கப்படுவதில்லை. அவ்வாறு நீக்கப்படால் எங்களிடம் தெரிவிக்கலாம்.