சென்னை: பெருநகர சென்னை மாநகராட்சி திருவிக நகர் மண்டலம் ஓட்டேரி நல்லா கால்வாயில், ட்ரோன் இயந்திரங்களைக் கொண்டு மேற்கொள்ளப்படும் கொசு ஒழிப்பு பணிகளை இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அவருடன் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய மேயர் பிரியா, "சென்னை மாநகராட்சி சார்பில் கொசுக்களை ஒழிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 3,312 மாநகராட்சி ஊழியர்கள் இந்தப் பணியில் ஈடுபட்டுள்ளனர். நீர் நிலைகளில் ஆரம்ப நிலையில் கொசு புழுக்கள் உருவாகக்கூடிய நிலையில் இருக்கும் பொழுதே கொசு மருந்துகளை தெளித்து அதை ஆரம்ப காலத்தில் அழிக்கும் பணிகளில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில் 412 கைத்த தெளிப்பான், 300 பேட்டரி மூலம் இயங்கும் கைத்தெளிப்பான்களும், 120 விசைத்தெளிப்பான்கள் மூலமும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தாண்டு சிஎஸ்ஆர் நிதி மூலம் 83 லட்சத்திற்கு 6 ட்ரோன் வழங்கப்பட்டது. இந்த ட்ரோன்கள் மூலம் 15 மீட்டர் வரை கொசு தெளிப்பான்களை தெளிக்க முடியும். மனிதர்கள் செல்ல முடியாத பகுதிகளில் இந்த பணிகள் மேற்கொள்ள உள்ளது" எனத் தெரிவித்தார்.
சென்னையில் 22 வயது பெண் கட்டடம் விழுந்து பலியானது குறித்த கேள்விக்கு, "சென்னை மாநகராட்சியிடம் அனுமதி வாங்கிவிட்டு தான் கட்டடத்தை இடித்தார்கள். ஆனால், வழி காட்டு நெறிமுறைகளை முறையாக பின்பற்றவில்லை. அது தனியாருக்கு சொந்தமான இடம் நாங்கள் கொடுத்த நெறிமுறைகளை அவர்கள் பின்பற்றாமல் பணிகளை மேற்கொண்டுள்ளனர்.