சென்னை:சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது, திருவிடைமருதூர் கோவி செழியன் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் சேகர்பாபு, 'இன்றைக்கு குடமுழுக்கு தொடர்பான பத்திரிகைகள் அனைத்தும் முழுக்க முழுக்க தமிழிலேயே அச்சடிக்கப்படுகிறது என்றால், அதற்கு முழு காரணமும் திமுக ஆட்சி தான்' எனப் பேசினார்.
மேலும் 'பழனி முருகன் கோயிலில் நூற்றுக்கும் அதிகமான ஓதுவார்கள் நியமிக்கப்பட்டு வேத மந்திரங்கள் தமிழில் வாசிக்கப்படுகிறது என்றால், அதற்கும் திமுக அரசு தான் காரணம்' எனவும் புகழாரம் சூடியுள்ளார்.