தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருநீர்மலை பெருமாள் கோயிலில் அறநிலையத்துறை அமைச்சர் திடீர் ஆய்வு - chennai dsitrict news

திருநீர்மலை பெருமாள் கோயிலில் அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு திடீரென ஆய்வு மேற்கொண்டார்.

http://10.10.50.85//tamil-nadu/17-June-2021/tn-che-05-minister-sekarbabuinspection-visual-script-7208368_17062021202056_1706f_1623941456_903.png
http://10.10.50.85//tamil-nadu/17-June-2021/tn-che-05-minister-sekarbabuinspection-visual-script-7208368_17062021202056_1706f_1623941456_903.png

By

Published : Jun 17, 2021, 10:56 PM IST

சென்னை: திருநீர்மலை பெருமாள் கோயிலில் முன்னதாக சாமி தரிசனத்தில் கலந்துகொண்ட அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய அவர், ”திருநீர்மலை பெருமாள் கோயிலில் முதியவர்கள் வெகுவாக சாமி தரிசனம் செய்வதால் அவர்களுக்காக ’ரோப் கார் திட்டம்’ குறித்த சாத்தியக்கூறுகள் இருக்கிறதா என்பது குறித்து அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொண்டேன். அதே போல் திருக்கோயிலில் பணிபுரியும் 20 பேரில் 10க்கும் மேற்பட்டோர்களில் ஐந்து ஆண்டுகள் பணி நிறைவு செய்தும், நியமனம் செய்யப்படாமல் இருப்பது முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும.

அறநிலையத்துறை அமைச்சர் திடீர் ஆய்வு

அவர்களுக்கான குடியிருப்பு சிதிலமடைந்து காணப்படுவதால், அதனை புனரமைப்பதா அல்லது புதிதாக கட்டித்தடுவதா என்பதும் பொறியாளர்களை வைத்து ஆராய்ந்து முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும்.

வெயில் காலங்களில் படிக்கட்டுகளில் சூடு இருப்பதால் நான்கு, ஐந்து இடங்களில் நிழற்குடைகள் அமைக்கப்படும்” எனக் கூறினார். இந்நிகழ்வில் ஊரக தொழில் துறை அமைச்சர், பல்லாவரம் சட்டபேரவை உறுப்பினர் இ.கருணாநிதி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: மதுவை கீழே ஊற்றி போராட்டம் நடத்திய பாமக தொண்டர்கள்!

ABOUT THE AUTHOR

...view details