தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சிலைகளின் சிறப்புகளை ‘QR Code' மூலம் அறிந்து கொள்ள புதிய திட்டம் - அமைச்சர் சாமிநாதன் - Minister saminathan news

சிலைகளின் சிறப்புகளையும், அவர்களின் வாழ்க்கை வரலாற்றையும் அறிந்து கொள்ள QR code பொருத்தப்பட்டு, அதன் மூலம் ஸ்கேன் செய்து அறிந்து கொள்ள செய்தித் துறை சார்பில் ஒரு வாரத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சாமிநாதன் தெரிவித்துள்ளார்.

சிலைகளின் சிறப்புகளை ‘QR Code' மூலம் அறிந்து கொள்ள புதிய திட்டம் - அமைச்சர் சாமிநாதன்
சிலைகளின் சிறப்புகளை ‘QR Code' மூலம் அறிந்து கொள்ள புதிய திட்டம் - அமைச்சர் சாமிநாதன்

By

Published : Apr 20, 2023, 5:06 PM IST

சென்னை:தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்றைய வினாக்கள் - விடை நேரத்தின்போது, அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கே.பி.முனுசாமி, “தமிழ் தாத்தா உ.வே.சாமிநாத ஐயர் சிலையை வைத்து சிறப்பிக்க வேண்டும். அவரது புகழை இளைஞர்களுக்கு தெரியப்படுத்தும் வகையில், சிலையின் கீழ் வாழ்க்கை வரலாற்றை கல்வெட்டாக அச்சிட வேண்டும். அனைத்து தலைவர்களின் சிலைகளுக்கும் கீழ், அவர்களது வாழ்க்கை வரலாற்றையும், புகழையும் கல்வெட்டாக அமைக்க வேண்டும். மேலும், உ.வே.சாவின் சிறப்புகள் குறித்து, அனைத்து நூலகங்களுக்கு நூலாக தொகுத்து வழங்க வேண்டும்” என கோரிக்கை வைத்தார்.

இதற்கு பதிலளித்துப் பேசிய செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன், “தலைவர்களின் சிறப்புகளை அறிந்து கொள்ள நூலாக தொகுத்து வழங்குவது, நிதி ஆதாரத்தைப் பொறுத்தது. மேலும், தலைவர்களின் புகழ் குறித்து புத்தகங்கள் உள்ளது. இருப்பினும், சிலைகளுக்கு கீழ் அவர்களது புகழ், வாழ்க்கை வரலாறு குறித்து அறிந்து கொள்ள, QR Code அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

ஒரு வாரத்தில் இந்தத் திட்டம் தொடங்கப்பட உள்ளது. முதலில் திருவள்ளுவர் சிலையின் கீழ், திருவள்ளுவரின் சிறப்புகள் குறித்து அறிந்து கொள்ளும் விதமாக தொடங்கி வைக்கப்பட உள்ளது. இதனை செய்தித் துறையின் இணையதளம் வழியாக மக்கள் அறிந்து கொள்ளலாம்” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:TNPSC: டிஜிபி ஓய்வுக்கு பிறகு டிஎன்பிஎஸ்சி தலைவராகிறாரா சைலேந்திர பாபு?

ABOUT THE AUTHOR

...view details