தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

புதிய அட்டைதாரர்களுக்கு இப்படி ஒரு அறிவிப்பா? - அமைச்சர் சக்கரபாணி

புதிய அட்டைதாரர்கள் எப்போது நியாய விலைக்கடைகளில் பொருள்கள் வாங்கலாம் என்பது குறித்து உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தகவல் தெரிவித்துள்ளார்.

new ration card
நியாய விலைக்கடை

By

Published : Aug 1, 2021, 8:15 AM IST

தமிழ்நாட்டில் பலரது வீடுகளில் நியாய விலைக்கடை அரிசிதான் முக்கிய உணவு ஆதாரமாக இருந்து வருகிறது. அதற்கு குடும்ப அட்டைகள் அவசியமான ஒன்றாக உள்ளது.

நாள்தோறும் புதிய அட்டைகளுக்காக பலர் விண்ணப்பித்தும் வருகின்றனர். விண்ணப்பித்த அனைவருக்கும் 15 நாட்களில் புதிய அட்டைகள் வழங்கப்படும் என்று மாநில அரசு சார்பில் அறிவிக்கப்பட்டது. அந்த அறிவிப்பு செயல்படுத்தப்பட்டும் வருகிறது.

இந்நிலையில் புதிய குடும்ப அட்டைகள் வழங்கும் பணியில், இதுவரை 3 லட்சம் பேருக்கு ஸ்மார்ட் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளதாக உணவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். அத்துடன் புதிய அட்டைதாரர்களுக்கு அவர் முக்கியமான அறிவிப்பையும் வழங்கியுள்ளார்.

அதன்படி, புதிதாக குடும்ப அட்டை பெற்றுள்ளவர்கள் இன்று முதல் நியாயவிலைக் கடைகளில் பொருள்களை வாங்கலாம். திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், 'உங்கள் தொகுதியில் முதலமைச்சர்' என்ற தலைப்பின் கீழ் நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்ட உணவுத்துறை அமைச்சர் இந்த தகவலை செய்தியாளர்களிடம் பகிர்ந்துகொண்டார்.

இதையும் படிங்க: அரசு அலுவலர்களுக்கு பணித்திறன் உயர்த்தும் பயிற்சிகள் - முதலமைச்சர் அறிவுறுத்தல்

ABOUT THE AUTHOR

...view details