சென்னை:கதாநாயகனாக ஜெய் ஆகாஷ் நடிக்க, கதாநாயகியாக அட்சயா கண்டமுத்தன் அறிமுகமாகிறார். முக்கிய கதாபாத்திரத்தில் விஜயகுமார் ’ராமகிருஷ்ணா’ படத்திற்குப் பிறகு மீண்டும் இணைந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிர்லாபோஸ், ஸ்ரேவன்,'கலக்கப் போவது யாரு' மைக்கேல் அகஸ்டின், திவாகர், திடியன், ஈரோடு பிரபு மற்றும் அருணாச்சலம் ஆகியோர் நடிக்கின்றனர். மிஸ் கனடா பட்டம் பெற்ற 'கீ கீ வாலஸ்' ஒரு பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார்.
இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு குற்றாலம், திருத்தணி, சென்னை அதன் சுற்றுப்புறங்களில் படமாக்கப்பட்டுள்ளது. ’தேனிசைத் தென்றல்’ தேவா இசையமைப்பில் மொத்தம் 4 பாடல்கள் இடம்பெறுகின்றன. மேலும் 5 சண்டைக்காட்சிகள் மற்றும் சேசிங் காட்சிகளும் இடம் பெறுகின்றன.
அனைத்து கட்ட வேலைகளும் முடிவடைந்த நிலையில் உருவாகி வரும் இத்திரைப்படம் விரைவில் வெள்ளித்திரைக்கு வருகிறது.
இதையும் படிங்க:'ஹனுமன்' திரைப்படத்தின் வில்லன் லுக் வெளியீடு