தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சிறைவாசிகளின் உணவு முறையில் மாற்றம் - அமைச்சர் ரகுபதி தொடங்கி வைத்தார் - prisoners food system

சென்னை புழல் சிறையில் சிறைவாசிகளின் உணவு முறையில் பல்வேறு மாற்றங்களை அமல்படுத்தி அமைச்சர் ரகுபதி தொடங்கி வைத்தார்.

சிறைவாசிகளின் உணவு முறையில் மாற்றம் - அமைச்சர் ரகுபதி தொடங்கி வைத்தார்
சிறைவாசிகளின் உணவு முறையில் மாற்றம் - அமைச்சர் ரகுபதி தொடங்கி வைத்தார்

By

Published : Jun 6, 2023, 8:42 AM IST

சென்னை புழல் சிறையில் சிறைவாசிகளின் உணவு முறையில் பல்வேறு மாற்றங்களை அமல்படுத்தி அமைச்சர் ரகுபதி தொடங்கி வைத்தார்

சென்னை: மறைந்த தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா பல்வேறு விதங்களில் கொண்டாடப்பட்டு வருகிறது. முன்னதாக, தமிழ்நாடு சட்டப்பேரவையில் சிறைத்துறையின் மானியக் கோரிக்கையின்போது, சிறைவாசிகளின் நலனுக்காக நிபுணர் குழு அறிக்கையின் அடிப்படையில், சிறைவாசிகளின் உணவு முறை மற்றும் உணவின் அளவினை ஆண்டுக்கு 26 கோடி ரூபாய் கூடுதல் செலவினத்தில் மாற்றி அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

இதன் அடிப்படையில், நேற்று (ஜூன் 5) மறைந்த தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, சென்னையில் உள்ள புழல் மத்திய சிறையில் உள்ள சிறைவாசிகளுக்கு இந்தப் புதிய உணவு முறை மற்றும் உணவின் அளவினை மாற்றி அமைக்கும் திட்டத்தினை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி அறிமுகப்படுத்தி தொடங்கி வைத்தார்.

இதன் மூலம் முன்னதாக ‘பி’ வகுப்பு சிறைவாசிகளுக்கு ஒரு நாளைக்கு 96.38 ரூபாய் உணவிற்காக செலவானதாகவும், தற்போது 135.26 ரூபாய் செலவில் உணவு வழங்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், ‘ஏ’ பிரிவு சிறைவாசிகளுக்கு முன்னதாக 146.44 ரூபாயும், தற்போது அது 207.89 ரூபாய் என்றும் உணவிற்காக செலவிடப்படுகிறது.

அதாவது, ‘பி’ பிரிவு சிறைவாசிக்கு காலை 6.30 மணிக்கு தேநீர், காலை 7 மணிக்கு கோதுமை உப்புமா மற்றும் அதன் உடன் இரண்டு வகையான சட்னி, பொங்கல் உடன் சட்னி, தக்காளி சாதம் - முட்டை, லெமன் சாதம், புதினா சாதம் என பரிமாறப்படுகிறது.

பின்னர், காலை 11.30 மணிக்கு சாப்பாடு, குழம்பு, ரசம், பொறியல், வாரத்தில் ஞாயிறு மற்றும் புதன்கிழமை அன்று கோழிக்கறி வழங்கப்படுகிறது. இதனையடுத்து மாலை 3 மணிக்கு தேநீர், சுண்டல் மற்றும் வேர்க்கடலை போன்றவை வழங்கப்படுகிறது. தொடர்ந்து, மாலை 4.30 மணியளவில் இரவு உணவாக சப்பாத்தி, சாப்பாடு மற்றும் சாம்பார் ஆகியவை வழங்கப்படுகிறது.

ஏ பிரிவு சிறைவாசிகளுக்கு ஞாயிறு, செவ்வாய் மற்றும் வியாழன் ஆகிய நாட்களில் கோழிக்கறி உடன் உணவு வழங்கப்படுகிறது. இந்த உணவு மாற்ற விழாவில் சிறைத்துறை டிஜிபி அமரேஷ் பூஜாரி, டிஐஜிக்கள் கனகராஜ், முருகேசன், சிறை கண்காணிப்பாளர்கள் கிருஷ்ணராஜ் மற்றும் நிகிலா நாகேந்திரன் உள்பட சிறைக் காவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க:பாளையங்கோட்டை சிறைக்கைதிகள் சாதி ரீதியாகப் பிரிக்கப்பட்டுள்ளனரா? - சிறைத்துறை டிஐஜி பதில்

ABOUT THE AUTHOR

...view details