தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

“திரையுலகம் செழிப்பாக இருக்க திமுக அரசுதான் காரணம்” - அமைச்சர் ரகுபதி - சினிமா அப்டேட்

Minister Regupathy press meet: அதிமுக ஆட்சியில் திரைத்துறையை என்ன பாடுபடுத்தினார்கள் என அனைவருக்கும் தெரியும், ஆனால் திரைத்துறையை முடக்க திமுக அரசு எதுவும் செய்யவில்லை என லியோ கட்டுப்பாடு தொடர்பாக அமைச்சர் ரகுபதி தெரிவித்தார்.

Minister Regupathy press meet
அமைச்சர் ரகுபதி

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 17, 2023, 1:29 PM IST

சென்னை: சென்னையில் உள்ள தமிழக அரசின் சட்டக் கல்லூரிகளில் முதுநிலை சட்டப்படிப்பில் சேர்வதற்கான தரவரிசைப் பட்டியலில் இடம் பெற்ற முதல் 10 மாணவ, மாணவியர்களுக்கு ஒதுக்கீடு ஆணைகளை வழங்கிய பின் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய அமைச்சர் ரகுபதி, "அரசு சட்டக் கல்லூரியில் மொத்தமாக எம்எல் படிப்பிற்காக 1,607 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அவை எல்லாம் பரிசீலனை செய்யப்பட்டு, 11 அரசு சட்டக் கல்லூரிகளில் உள்ள 21 முதுநிலை பாடப்பிரிவுகளுக்கு 420 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அதில் முதல் 10 நபர்களுக்கு இன்று தேர்ச்சிக்கான சான்றிதழ் வழங்கப்பட்டது.

அரசு சட்டக் கல்லூரிகள் மற்றும் தனியார் சட்டக் கல்லூரிகளில் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பதற்கான அவசியம் ஏற்பட்டால், அது செய்து தரப்படும். நீண்டகால சிறைவாசிகளுக்கு 49 பேருக்கு விடுதலை செய்ய ஆளுநருக்கு அனுப்பியுள்ள கோப்புகள் அனைத்தும் தற்போது வரையிலும் நிலுவையில் உள்ளது” என்றார்.

நீண்ட கால சிறைவாசிகளின் விடுதலைக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க மாட்டார் என்ற அண்ணாமலை கருத்துக்கு பதில் அளித்த அமைச்சர், “ஆளுநரும் அண்ணாமலையும் ஒன்றுதான் என அண்ணாமலையே ஒத்துக் கொண்டார், ஆளுநர்தான் அண்ணாமலை. அண்ணாமலைதான் ஆளுநர்.

மேலும் லியோ பட சிறப்பு காட்சி தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர், “சிறப்பு காட்சிகளுக்கு தமிழக அரசு தரப்பில் எந்த தடையும் விதிக்கப்படவில்லை. லியோ படத்திற்கு காலை 4 மணிக்கு சிறப்பு காட்சி கேட்டார்கள். ஆனால், காலை 9 மணிக்கு கொடுத்து இருக்கிறோம். இன்று நீதிமன்றம் சென்றிருக்கிறார்கள். நீதிமன்றம் 4 மணிக்கு சிறப்பு காட்சிக்கு அனுமதித்தால், அந்த உத்தரவுக்கு நாங்கள் செயல்படுவோம்” என்றார்.

தீபாவளி போன்ற பண்டிகை நாட்களில்தான் 6 காட்சி சிறப்பு காட்சி கொடுக்கப்படும். லியோ படத்திற்கு காலை 9 மணி காட்சி ரசிகர்கள் மட்டும்தான் வருவார்கள். ஆனால் காலை 8.45 மணிக்கு குடும்பத்துடன் வந்து பார்ப்பவர்கள் யாரும் பார்க்கப் போவதில்லை என கூறினார். தமிழக அரசு சினிமாவிற்கு எந்த வித தடையும் போட்டு திரை உலகத்துடன் எதிர்ப்பை பெற்றுக் கொள்பவர்கள் இல்லை.

திரை உலகம் எங்களுடைய நட்பு உலகம். திரை உலகத்தோடு எப்போதும் நெருங்கிய நட்பாக இருப்போம், வெறுப்பை சம்பாதிக்க மாட்டோம். தளபதியும் அதை விரும்ப மாட்டார். அதிமுக ஆட்சியில் திரைத்துறையை என்ன பாடுபடுத்தினார்கள் என தெரியும். திரைத்துறையை முடக்க இந்த அரசு எதுவும் செய்யவில்லை. அவர்களை உற்சாகப்படுத்தி ஊக்கப்படுத்துகிறோம். மலிந்த தயாரிப்பாளர்கள் படங்களைக் கூட வெளியிடுகிறோம். திரை உலகம் செழிப்பாக இருக்க திமுக அரசுதான் காரணம்” என தெரிவித்தார்.

தற்போது ஆன்லைன் ரம்மி அமைக்கப்பட்டிருக்கக்கூடிய குழு அதன் பணிகளை செய்து வருகிறது. உச்ச நீதிமன்றத்திற்கு வழக்கு உள்ளதாக கூறியவர், ஆன்லைன் ரம்மிக்கும், ரம்மிக்கும் இரண்டு வேறுபாடுகள் உள்ளது. ரம்மி என்பது இரண்டு பேர் நேருக்கு நேர் விளையாடுகிற விளையாட்டு, மூன்றாவது ஆளுக்கு இடம் கிடையாது. ஆனால், ஆன்லைன் ரம்மி என்பது ஒரு புரோக்ராம் செட் செய்யும் விளையாட்டு.

எனவே, அதில் மூன்றாவது நபர் விளையாடுவதற்கு வாய்ப்புள்ளது. ஆசை வார்த்தைகளை உருவாக்குவதைப் போல் பணத்தை பிடுங்கி விடுவார்கள். அதை நாங்கள் பலமுறை எடுத்துச் சொல்லியும் ஏற்றுக் கொள்ள மறுக்கிறார்கள் என்பது விநோதமாகவும், ஆச்சரியமாகவும் உள்ளது.

ஆன்லைன் ரம்மி என்பது நேரடியாக விளையாடும் விளையாட்டு அல்ல, மூன்றாவது நபரால் தேர்ந்தெடுக்கப்படும் ஒரு விளையாட்டு. அந்த புரோக்ராம் செட் செய்பவர்கள் வெளிமாநிலத்தில் இருப்பவர்கள் என்றால், அவர்களைக் கட்டுப்படுத்த முடியாத சூழ்நிலை இருக்கிறது. அதற்காகத்தான் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: பிரபல தனியார் உணவக சாம்பார் இட்லியில் மிதந்த புழு - வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி!

ABOUT THE AUTHOR

...view details