தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக, வருவாய் நிர்வாகம், பேரிடர் மேலாண்மை துறை இணைந்து நடத்தும் விவசாயிகள் மற்றும் கிராம அளவிலான அலுவலர்களுக்கு வறட்சி, பேரிடர் மேலாண்மை குறித்த ஒரு நாள் திறன் மேம்பாட்டு பயிற்சியில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சியை வருவாய் பேரிடர் மேலாண்மை, தகவல் தொழில் நுட்பவியல் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பார்வையிட்டார்.
'எத்தனை ஆண்டுகள் ஆனாலும் திமுக ஆட்சிக்கு வராது' - அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் - அமைச்சர் ஆர் பி உதயகுமார் செய்தியாளர் சந்திப்பு
சென்னை: எட்டு மாதங்கள் அல்ல எத்தனை ஆண்டுகள் ஆனாலும் இனி திமுக ஆட்சிக்கு வர முடியாது என்று அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "எட்டு மாதங்கள் கழித்து தேர்தல் வரும். மக்கள் வாக்களிப்பார்கள். ஆனால் தீர்ப்பினை அதிமுகவிற்கு தான் வழங்குவார்கள். எத்தனை ஆண்டுகளானாலும் இனி திமுக ஆட்சிக்கு வர முடியாது. வளர்ச்சிக்கு ஏற்ற வகையில் தங்களை உருவாக்கிக்கொள்ள திமுக பின்தங்கியே உள்ளது. மக்களின் கவனத்தை ஈர்ப்பதில் தத்தளித்துக் கொண்டிருக்கிறது.
எதிர்க்கட்சி தலைவர்கள் தங்களது தொண்டர்களை சோர்வடையாமல் இருப்பதற்காக முதலமைச்சர் ஆகிவிடுவோம் என கூறுவது எதார்த்தம். காலத்திற்கு ஏற்ப மக்களின் தேவையை அறிந்து கொள்கையை முன்வைத்து மக்களை பாதுகாப்பதிலும், உரிமையை மீட்பதிலும் அதிமுக அரசு முனைப்பு காட்டி வருகிறது. திமுக எந்த மக்கள் பணியிலும் ஈடுபடவில்லை என்ற எங்களது குற்றச்சாட்டை திமுக தலைவர் ஒப்புதல் வாக்குமூலமாக அளித்துள்ளார்" என்று தெரிவித்தார்.