தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திமுக மக்கள் விரோத கட்சி - அமைச்சர் ஆர்பி உதயகுமார் குற்றச்சாட்டு! - Minister RB Udhayakumar

சென்னை: திமுக மக்கள் விரோத கட்சி என வருவாய்த்துறை அமைச்சர் ஆர்பி உதயகுமார் தெரிவித்துள்ளார்.

வருவாய் துறை அமைச்சர் ஆர் பி உதயகுமார் செய்தியாளர் சந்திப்பு
வருவாய் துறை அமைச்சர் ஆர் பி உதயகுமார் செய்தியாளர் சந்திப்பு

By

Published : Aug 25, 2020, 3:44 PM IST

சென்னை திருவெற்றியூர் மண்டலத்தில் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்பி உதயகுமார் கரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ஆர்பி உதயகுமார், “வைரஸ் தொற்று கட்டுக்குள் கொண்டுவர இதுவரை ஏழு ஊரடங்கு போடப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் தீவிர நடவடிக்கைகள் காரணமாக இந்தியாவிலேயே அதிக பரிசோதனை செய்ய மாநிலம் தமிழ்நாடுதான். இ-பாஸ் தொடர்பாக தலைமை செயலாளர் துறை அலுவலர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை மேற்கொண்டுவுள்ளார்.

வருவாய் துறை அமைச்சர் ஆர் பி உதயகுமார் செய்தியாளர் சந்திப்பு

திமுக நிகழ்ச்சிகளுக்கு எந்த தடையும் இல்லை. ஆனால் அவர்களே அவர்களுக்கு தடை போட்டு உள்ளனார். திமுக தலைவர் மனம் வெள்ளை இல்லை. அதனால்தான் அவர் வெள்ளை அறிக்கை கேட்கிறார் என்று பாஜக தேசிய தலைவர் நட்டா சொல்லி இருப்பது சரிதான்” எனக் கூறினார்.

மேலும், திமுக மக்கள் விரோதக் கட்சி என்றும், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு திமுக தடையாக உள்ளது எனவும் தெரிவித்தார்.

இதையும் படிங்க...திமுகவினர் மீதான குட்கா வழக்கு: உரிமை மீறல் நோட்டீஸை ரத்து செய்து உயர் நீதிமன்றம் அதிரடி!

ABOUT THE AUTHOR

...view details