தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மக்கள் ஒத்துழைத்தால் 100 விழுக்காடு மீண்டெழுவோம் - ஆர்.பி.உதயகுமார் - மக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும்

சென்னை: அரசு சொல்லும் வழிமுறைகளை பின்பற்றி மக்கள் 100 விழுக்காடு ஒத்துழைப்பு தந்தால், கரோனாவிலிருந்து 100 விழுக்காடு மீண்டு வர முடியும் என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.

minister
minister

By

Published : Jul 8, 2020, 2:16 PM IST

சென்னை திருவொற்றியூர் மண்டலத்தில் நோய் தடுப்பு நடவடிக்கைகளை கண்காணிக்க புதிதாக கட்டப்பட்ட நோய் கட்டுப்பாட்டு மையத்தை வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் திறந்து வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, "தமிழ்நாடு அரசு எடுத்து வரும் நடவடிக்கைக்கு, மக்கள் ஒத்துழைப்பு அளித்து வருவதால் கரோனா பாதிப்பாளர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. திருவொற்றியூர் மண்டலத்தைப் பொறுத்தவரையில், பிற நோய் உள்ளவர்களை காப்பாற்றும் பணி மிகவும் சவாலாக உள்ளது.

செய்தியாளர் சந்தித்து பேசிய அமைச்சர்

இருந்தபோதிலும் ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்தால் அவர்களை காப்பாற்றும் நடவடிக்கையில் 100 விழுக்காடு வெற்றி கிடைக்கும். மக்கள் ஒத்துழைத்ததால் கடந்த இரண்டு நாள்களாக நோய்த்தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது. இனிவரும் காலங்களிலும் அரசு சொல்லும் வழிமுறைகளைப் பின்பற்றி மக்கள் மேலும் 100 விழுக்காடு ஒத்துழைத்தால் நோய்த் தொற்றிலிருந்து 100 விழுக்காடு மீண்டு வரமுடியும்" எனக் கூறினார்.

இதையும் படிங்க:புதுவையில் ஞாயிற்றுக் கிழமைகளிலும் ஊரடங்கு?

ABOUT THE AUTHOR

...view details