தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கரோனா தொற்றிலிருந்து குணமடைந்தார் அமைச்சர் ராமச்சந்திரன்!

சென்னை: கரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன், தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்.

minister-ramachandran-recovers-from-corona-infection
minister-ramachandran-recovers-from-corona-infection

By

Published : Sep 16, 2020, 6:28 PM IST

தமிழ்நாட்டில் கரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, தமிழ்நாடு இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் தொற்றால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தார்.

இந்நிலையில், வைரஸ் தொற்றிலிருந்து அமைச்சர் குணமடைந்து இன்று (செப்டம்பர் 16) வீடு திரும்பியுள்ளதாக அப்போலோ மருத்துவமனை அறிவித்துள்ளது. இது குறித்து மருத்துவமனையின் அறிவிப்பில், "இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் கரோனா வைரஸ் தொற்றினால் செப்டம்பர் 8ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையினை தொடர்ந்து குணம் அடைந்துள்ளார்.

இதையடுத்து, அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் தொற்றிலிருந்து பூரணமாக குணமடைந்து இன்று வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்" என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:2020-2021ஆம் ஆண்டின் முதல் துணை மதிப்பீடுகளுக்கு ரூ.12,845.20 கோடி நிதி ஒதுக்கீடு!

ABOUT THE AUTHOR

...view details