சட்டப்பேரவையில் வனத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தின்போது அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் திண்டுக்கல் சீனிவாசன், "வனப்பரப்பை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த அதிமுக ஆட்சியில்தான் வன உயிர் மோதலில் உயிரிழந்தவர்களுக்கு இழப்பீட்டு தொகை 4 லட்சத்தில் இருந்து 10 லட்சமாக உயர்த்தப்பட்டது" என பேசினார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் ராமச்சந்திரன், “வன உயிர் மோதலில் உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடாக ரூ. 4 லட்சத்திலிருந்து ரூ.10 லட்சமாக உயர்த்தி வழங்குவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், இடைக்கால பட்ஜெட்டில் நிதி ஒதுக்கவும் இல்லை, வழங்கவும் இல்லை.
டான்டீ (TANTEA), ரப்பர் தோட்ட கழகம் உள்ளிட்டவை நஷ்டத்தில் இயங்கி வருகிறது. அடுத்த 2 ஆண்டுகளில் லாபகரமானதாக இயங்க நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.