தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

’அது ராஜேந்திர பாலாஜியின் தனிப்பட்ட கருத்து; கட்சியின் கருத்து அல்ல’ - அமைச்சர் ஜெயக்குமார் - minister Rajenthra Bhalaji issue

சென்னை: இஸ்லாமியர் குறித்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியது அவரின் தனிப்பட்ட கருத்து என்றும் அது கட்சியின் கருத்தல்ல என்றும் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

minister Rajenthra Bhalaji issue: that is his personal opinion, says minister jayakumar
minister Rajenthra Bhalaji issue: that is his personal opinion, says minister jayakumar

By

Published : Feb 4, 2020, 3:02 PM IST

சென்னை ராயபுரம் நார்த்விக் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சியில் அமைச்சர்கள் ஜெயக்குமார், செங்கோட்டையன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

மிதிவண்டிகளை வழங்கிய பின்னர் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், ”தமிழ்நாடு முழுவதும் இதுவரை 45.48 லட்சம் மாணவர்களுக்கு இலவச மிதிவண்டிகள் வழங்கப்பட்டுள்ளன. மாணவர்களின் கல்வித்தரத்தை உயர்த்துவதற்காக மடிக்கணினிகள், கையடக்க கணினிகள், காலுறைகள் ஆகியவை வழங்கப்படுகின்றன.

மேலும், ஓராண்டுக்கு மேல் இலவச மடிக்கணினி வழங்கும் திட்டத்தை உ.பி. அரசால் செயல்படுத்த முடியாத நிலையில், தமிழ்நாட்டில் இலவச மடிக்கணினி வழங்கும் திட்டம் தொடர்ந்து மாணவர்களின் நலன் கருதி செயல்படுத்தப்பட்டுவருகிறது. நீட் தேர்விலிருந்து விலக்குப் பெற அரசு போராடும்” என்றார்.

அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில், “இஸ்லாமியர்கள் பற்றி அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியது அவரின் தனிப்பட்ட கருத்து; அது கட்சியின் கருத்து அல்ல. டி.என்.பி.எஸ்.சி.யைக் கண்டித்து உதயநிதி ஸ்டாலின் போராட்டம் நடத்துவது கட்சியில் அவரை முன்னிலைப்படுத்துவதற்குத்தான்” என்றார்.

இதையும் படிங்க: 'ராஜேந்திர பாலாஜியின் சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணையை ஏன் தொடரக்கூடாது?' - நீதிமன்றம் கேள்வி

ABOUT THE AUTHOR

...view details