சென்னை: கோயம்பேடு பேருந்து நிலையத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தீபாவளி சிறப்பு பேருந்துகளை ஆய்வு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் உள்ள 20,371 பேருந்துகளில் 37 பேருந்துகள் பெரும் பழுது உள்ளிட்ட தவிர்க்க முடியாத காரணங்களால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. 20,334 பேருந்துகள் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்காக இயக்கப்படுகின்றன.
சிறப்பு பேருந்துகள்
நேற்றைய தினம் சென்னையில் இருந்து 2,100 தினசரிப் பேருந்துகளுடன் 338 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டது. அதில் 89,932 பயணிகள் தங்கள் சொந்த ஊர்களுக்குப் பயணம் செய்துள்ளனர். இன்றைய தினம் இரவு 7 மணி நிலவரப்படி சென்னையிலிருந்து இயக்கப்படும் பேருந்துகளில், 1,88,107 பயணிகள் பயணம் செய்கின்றனர்.