தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பேருந்து கட்டணத்தை உயர்த்தும் எண்ணம் இல்லை - அமைச்சர் ராஜகண்ணப்பன் உறுதி! - சென்னை அண்மைச் செய்திகள்

பெட்ரோல் டீசல் விலை உயர்ந்து வந்தாலும், பேருந்து கட்டணத்தை உயர்த்தும் எண்ணம் அரசுக்கு இல்லை என போக்குவரத்துத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

bus fare not increased
bus fare not increased

By

Published : Jun 29, 2021, 3:35 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் 27 மாவட்டங்களில் நேற்று மீண்டும் இயக்கப்பட்ட பேருந்துகள் மூலம் ஒரே நாளில், 22 லட்சம் பேர் பயணம் செய்துள்ளதாக போக்குவரத்துத்துறை அமைச்சர் தெரிவித்தார்.

பேருந்துகளில் திருக்குறள்

தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ராஜகண்ணப்பன் கூறியதாவது, "பேருந்துகளில் திருவள்ளுவர் படத்துடன், திருக்குறள் தெளிவுரையும் எழுதும் பணி நடைப்பெற்று வருகிறது. ஒவ்வொரு பேருந்துகளிலும் வெவ்வேறு திருக்குறள் இருக்கும் வகையில் பணிகள் நடைபெற்று வருகிறது என்றார்.

தொடர்ந்து, ரூ.31 ஆயிரம் கோடி அளவில் போக்குவரத்துத்துறை நஷ்டத்தில் உள்ளதாக குறிப்பிட்ட அவர், அதிமுக அரசால் நிறுத்தி வைக்கப்பட்ட அனைத்து இடங்களிலும் பேருந்துகளை இயக்க உத்தரவிட்டுள்ளதாகவும், பெட்ரோல் டீசல் விலை உயர்ந்தாலும், பேருந்து கட்டணத்தை உயர்த்தும் எண்ணம் இல்லை

புதிய பேருந்துகள்

தமிழ்நாட்டில் இயக்கப்படும் பேருந்துகளில், 6 ஆயிரத்து 262 பேருந்துகள் சாதாரண பேருந்துகள் எனவும், பேருந்துகளில் பயணம் செய்யும் மகளிருக்கு வழங்க, தனியாக புதிய வண்ணத்தில் பயணச்சீட்டு தயார் செய்யப்பட்டுள்ளது, நகரப்பேருந்துகளில் புதிய வண்ணம் பூச நடவடிக்கை மேற்கொண்டு வருவதோடு, முதலமைச்சருடன் கலந்தாலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும்.

தமிழ்நாடு போக்குவரத்து துறைக்கு 500 மின்சார பேருந்துகள், 2000 டீசல் பேருந்துகள் வாங்க பேச்சுவார்த்தை நடைப்பெற்று வருகிறது எனக் கூறினார்.

22 லட்சம் பேர் பயணம்

மேலும் தமிழ்நாட்டின், 27 மாவட்டங்களில் நேற்று (ஜூன்.28) மீண்டும் இயக்கப்பட்ட பேருந்துகள் மூலம், 22 லட்சம் பயணிகள் பயணம் செய்துள்ளதாகவும், பயணிகளின் வருகைக்கு ஏற்ப பேருந்துகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

இதையும் படிங்க:தமிழ்நாடு சிறுபான்மையின ஆணையத்தலைவராக பீட்டர் அல்போன்ஸ் நியமனம்

ABOUT THE AUTHOR

...view details