சென்னை: தமிழ்நாடு கதர் மற்றும் கிராமத் தொழில்கள் துறை சார்பில் முக்கிய அறிவிப்புகளை அமைச்சர் ராஜகண்ணப்பன் சட்டப் பேரவையில் வெளியிட்டார். அவர் வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள் பின்வருமாறு;
- சென்னை எஸ்பிளனேடு பகுதியில் 44,640 சதுர அடி நிலப்பரப்பில் அமைந்துள்ள குறளாக கட்டினத்தினை இடித்து விட்டு நவீன வசதிகளுடனும், போதுமான வாகன நிறுத்தும் இட வசதிகளுடனும் புதிய கட்டிடம் ரூ.100 கோடி செலவில் கட்டப்படும்.
- சுமார் 8,720 சதுர அடி பரப்பில் அமைந்துள்ள திருச்சிராப்பள்ளி உதவி இயக்குனர் மற்றும் மண்டல துணை இயக்குனர் அலுவலகம் இயங்கி வருகிறது. இந்த கட்டிடம் 1966-ல் கட்டப்பட்ட நிலையில் தற்போது பழுதடைந்துள்ளது. ஆகையால் இந்த கட்டிடத்தை இடித்து புதிய கட்டிடம் ரூ.5.60 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும்.
- கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் பகுதியில் கொள்முதல் செய்யப்படும் பச்சைத் தேனின் விலையை கிலோ ஒன்றுக்கு ரூ.140 இல் இருந்து ரூ.145 ஆக உயர்த்தி வழங்கப்படும்.
- நீலகிரி மாவட்ட தேன் விவசாயிகளிடமிருந்து மலை தேனை கொள்முதல் செய்து பகுப்பாய்வு செய்து பாட்டில்களில் நிரப்பிட ஏதுவாக திருப்பூர் கதிர்வலாகத்தில் ரூ.15 லட்சம் செலவில் புதிய தேன் பதப்படுத்தும் நிலையம் ஒன்று நிறுவப்படும்.
- மேலும், நீலகிரி மாவட்டம் கோகால் திருச்சிக்கடி கீழ் கோத்தகிரி புது கோத்தகிரி மற்றும் கொல்லிமலை ஆகிய பகுதிகளில் மண்பாண்டகளை செய்யும் கோத்தாஸ் பழங்குடி மக்களின் உற்பத்தி திறனை அதிகரித்திட இலவசமாக 100 நவீன மின்விசை சக்கரங்கள் ரூ.25 லட்சம் செலவில் வழங்கப்படும்.
- நீலகிரி மாவட்டம் கோக்கால் மற்றும் திருச்சிக்கடி ஆகிய பகுதிகளில் உள்ள மண்பாண்டகளை செய்யும் கோத்தாஸ் பழங்குடி மக்களுக்கு ரூ.25 லட்சம் செலவில் 600 சதுர அடி மற்றும் 300 சதுர அடி அளவுகளில் 2 மண்பாண்ட தொழிற்கூடங்கள் கட்டித் தரப்படும்.
- நீலகிரி மாவட்டம் கோக்கால் மற்றும் திருச்சிக்கடி ஆகிய பகுதிகளில் உள்ள மண்பாண்டகளை செய்யும் கோத்தாஸ் இன மக்களுக்கு ரூ.3 லட்சம் செலவில் 4 மண் அரைக்கும் இயந்திரங்களும் வழங்கப்படும்.
- செங்கோட்டை மண்பாண்ட தொழில் கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் பயன்பெறும் வகையில் தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் ரூ.14 லட்சம் மதிப்பீட்டில் 600 சதுர அடி அளவில் புதிய தொழில் கூடம் கட்டித் தரப்படும்.
- வாடிக்கையாளர்களை கவரும் வண்ணம் மூன்று கதரங்காடிகள் ரூ.3 லட்சம் செலவில் புதுப்பிக்கப்படும்.
- பட்டு நெசவுத் தொழிலில் ஈடுபட்டுள்ள சுமார் 40 பட்டு நெசவாளர்களுக்கு ரூ.10 லட்சம் செலவில் புதிய தரிகல் வழங்கப்படும்.
- பட்டு நெசவு பணி மேற்கொள்ளும் 300 பட்டு நெசவாளர்களுக்கு ரூ.8 லட்சம் செலவில் தறி உபகரணங்கள் வழங்கப்படும்.
- கதர் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள 100 நெசவாளர்களுக்கு ரூ.7 லட்சம் செலவில் தறி உபகரணங்கள் வழங்கப்படும்.
- சிவகங்கை மாவட்டம் கண்டனூர் சோப்பு அழகில் தானியங்கி சோப்பு தயாரிக்கும் இயந்திரம் ஒன்று ரூ.15 லட்சம் செலவில் நிறுவப்படும்.