சென்னைதேனாம்பேட்டை அண்ணா அறிவாலயத்தில் காவிரி விவகாரம் குறித்து சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர் பேசியதாவது, “காவிரி விவகாரம் குறித்து அடிப்படை புரிதல் இல்லாமல் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார். உச்ச நீதிமன்ற தீர்ப்பின் படி கர்நாடக அரசு செயல்பட வேண்டும். இதனைக் கண்காணிக்கத்தான் காவேரி மேலாண்மைக் குழு ஒன்றிய அரசின் கீழ் செயல்பட்டு வருகிறது.
இதனை எடப்பாடி பழனிசாமி உணரவில்லையா? காவிரி விவகாரத்தில் திமுக அரசு துணிச்சலாக செயல்படவில்லை என்று கூறும் எடப்பாடி பழனிசாமி முதலில் தன்னுடைய துனிச்சலை சட்டப்பேரவையில் தெரிவித்திருக்கலாம். முதலமைச்சர் கொண்டு வந்துள்ள தீர்மானத்தில் என்ன இருக்கிறது என்பதை சரியாக அறிந்து கொள்ளாமல் ஒன்றிய பாஜக அரசுக்கு முட்டுக் கொடுக்கும் நோக்கில் சட்டபேரவையில் உலரி இருக்கிறார்.
காவிரி விவகாரத்தில் மோடி அரசைக் காப்பாற்ற வேண்டும் என்கிற நோக்கில் பாஜக 'B' டீமாக அதிமுக செயல்படுகிறது என்பதை உணர்த்தியுள்ளார் எடப்பாடி. காவேரி விவகாரம் பற்றியும் தீர்ப்பை நடைமுறைப்படுத்துவது பற்றியும் அடிப்படை புரிதல் இல்லாமல், ஆளும் காங்கிரஸ் மீது குற்றச்சாட்டு வைக்க வேண்டும் ஒன்றிய பாஜக அரசை காப்பாற்ற வேண்டும் என்ற ஒரே நோக்கில் ஈபிஎஸ் இதை வலியுறுத்தி உள்ளார்.