2021-22ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை, சட்டப்பேரவையில் வரும் ஆகஸ்ட் 13ஆம் தேதி தாக்கல் செய்யப்படுகிறது. இந்நிலையில், கடந்த 10 ஆண்டுகால ஆட்சியின் நிதி செயல்பாடு குறித்த வெள்ளை அறிக்கையை நாளை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வெளியிடுகிறார்.
120 பக்கங்கள் கொண்ட அந்த நிதிநிலை அறிக்கையில், கடந்த அதிமுக ஆட்சியின் நிதி நிலைமை, கடன் சுமை, கஜானாவில் உள்ள நிதி, நிதி வருவாய் உள்ளிட்டவை குறித்த தகவல்கள் இடம்பெறவுள்ளது.
நாளை(ஆகஸ்ட்.9) காலை 11.30 மணிக்கு சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர் சந்திப்பின்போது நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வெள்ளை அறிக்கையை வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த 2001 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சிக்காலத்தில் வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டது. அப்போது நிதி அமைச்சராக இருந்த சி.பொன்னையன், பட்ஜெட் தாக்கலின் போது வெள்ளை அறிக்கையை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:’தற்போதைய நல்ல பெயரை பயன்படுத்தி 100% வெற்றிபெற வேண்டும்’ - கட்சியினருக்கு ஸ்டாலின் அறிவுரை