சென்னை கலைவாணர் அரங்கில் இன்று (ஏப். 30) திமுக மாணவரணி சார்பாக கல்வி - சமூக நீதி - கூட்டாட்சி தத்துவம் என்ற தலைப்பில் தேசிய அளவிலான மாநாடு தொடங்கியது. இந்த நிகழ்ச்சியில் உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி கலந்து கொண்டார்.
அப்போது பேசிய அவர், "நான் 17 ஆண்டுகளாக ஆசிரியராக பணியாற்றியவன். உங்களை பார்க்கும் பொழுது எனக்கு பழைய வகுப்புகள் எடுத்த நினைவுகள் வருகின்றன. மாநிலங்களை காப்பதே ஆளுநரின் வேலையாக இருக்க வேண்டுமே தவிர மத்திய அரசை காப்பதல்ல.
முன்னதாக, தனியார் கல்லூரி ஒன்றின் பட்டமளிப்பு விழாவிற்கு சென்று இருந்தேன். அதில் 70 மாணவர்களில் 55 பெண்கள் பட்டம் பெற்றனர். அதிக மாணவர்கள் பட்டம் பெறுவது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது.