தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அரசு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு 25% இடங்களை அதிகரித்துக்கொள்ளலாம் - அமைச்சர் பொன்முடி - ponmudi

அரசு கலை, அறிவியல்  கல்லூரிகளில் நடப்பாண்டு மாணவர் சேர்க்கையை 25 விழுக்காடு அதிகரித்துக்கொள்ளலாம் என  உயர் கல்வித்துறை  அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார்.

ponmudi
அமைச்சர் பொன்முடி

By

Published : Aug 17, 2021, 6:57 PM IST

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த 13ஆம் தேதி பட்ஜெட் தாக்கலுடன் தொடங்கியது. இதனைத்தொடர்ந்து, பட்ஜெட் மீதான விவாதமும் நடைபெற்றது.

இந்நிலையில் இன்று, அதிமுக எம்எல்ஏ ராஜன் செல்லப்பா, '12ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் ஆல்-பாஸ் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகரித்துள்ளது.

இதனால், கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கான அளவு அதிகரிக்கப்பட வேண்டும். அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதா' எனக் கேள்வி எழுப்பினார்

இதற்குப் பதிலளித்த உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, 'அரசு கல்லூரிகளில் நடப்பாண்டு மாணவர் சேர்க்கைக்காக, இருக்கின்ற இடத்திலேயே 25 விழுக்காடு இடத்தை அதிகரித்துக் கொள்ளலாம்' எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:பள்ளிகள் திறக்கப்படுமா; இல்லையா? - அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்

ABOUT THE AUTHOR

...view details