தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஜூலை 26 முதல் கல்லூரிகளில் சேர விண்ணப்பிக்கலாம் - அமைச்சர் பொன்முடி - etv bharat

தமிழ்நாட்டில் பிளஸ் 2 முடிவுகள் வெளியான நிலையில், கல்லூரிகளில் சேர ஜூலை 26ஆம் தேதி முதல் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

அமைச்சர் பொன்முடி
அமைச்சர் பொன்முடி

By

Published : Jul 19, 2021, 12:53 PM IST

சென்னை: தலைமை செயலகத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களைச் சந்தித்தார்.

ஆன்லைன் மூலம் விண்ணப்பம்

அப்போது அவர் கூறியதாவது, "பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகி உள்ளன. இந்நிலையில் மாணவர்கள் ஆன்லைன் மூலம் கலை, அறிவியல் கல்லூரிகள் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் சேர்வதற்கு வரும் 26ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 24ஆம் தேதி வரை விண்ணப்பிக்காலம்.

மாணவர்களுக்கு கால அவகாசம்

ஜூலை 31ஆம் தேதி சிபிஎஸ்இ மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியாகும். அதன் பின்னர் அவர்களுக்கு கல்லூரிகளில் விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்படும்" என்றார்.

இதையும் படிங்க: +2 தேர்வு முடிவுகள் வெளியீடு

ABOUT THE AUTHOR

...view details