தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தடுப்பூசி செலுத்திக்கொண்டு கல்லூரிக்கு வர வேண்டும் - அமைச்சர் பொன்முடி!

செப்டம்பர் 1ஆம் தேதி கல்லூரிகள் திறக்கப்படும் போது அனைத்து மாணவர்களும் தடுப்பூசி செலுத்திக்கொண்டு கல்லூரிக்கு வர வேண்டும் என உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

அமைச்சர் பொன்முடி
அமைச்சர் பொன்முடி

By

Published : Aug 28, 2021, 1:26 PM IST

சென்னை: செப்டம்பர் 1ஆம் தேதி முதல் கல்லூரிகள் திறக்கவுள்ள நிலையில், சென்னை நந்தனம் அரசு ஆடவர் கலைக்கல்லூரியில் மாணவர்களுக்கான கரோனா தடுப்பூசி முகாமை மருத்துவம்,மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

பின்னர் பேசிய மா.சுப்பிரமணியன், "நந்தனம் கல்லூரியில் புதிய பாடப் பிரிவு தொடங்கப்படாமல் இருக்கிறது. கூடுதல் பாட பிரிவு வேண்டும் என்று கல்லூரி முதல்வர் கோரிக்கை வைத்திருந்தார்.

தடுப்பூசி முகாம் தொடங்க ஏற்பாடு

அதன் அடிப்படையில் மூன்று புதிய பாடப் பிரிவை தொடங்கி வைத்துள்ளார் உயர் கல்வித்துறை அமைச்சர். மேலும், 10 க்கும் மேற்பட்ட பாடப் பிரிவு வேண்டும் என்று கேட்டு இருந்தார். ஆனால் கல்லூரியில் அந்த பாடப் பிரிவிற்கு அடிப்படை வசதிகள் செய்த பிறகு அடுத்த ஆண்டு பாடப் பிரிவை அதிகப்படுத்துவதாக தெரிவித்து இருக்கிறோம்.

90 விழுக்காடு ஆசிரியர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு விட்டது. இந்த மாதத்திற்கு 23 லட்சம் தடுப்பூசி கூடுதலாக ஒன்றிய அரசு வழங்கியுள்ளது. சென்னையில் உள்ள 112 அரசு, தனியார் கல்லூரிகளிலும் தடுப்பூசி முகாம் தொடங்க ஏற்பாடு செய்ய இருக்கிறோம்.

அமைச்சர் பொன்முடி

மேலும், லயோலா கல்லூரியில் தடுப்பூசி முகாமை புதன்கிழமை தொடங்கி வைக்க இருக்கிறேன். செப்டம்பரில் 18 வயதை நிரம்பிய கல்லூரி மாணவர்களுக்கு தடுப்பூசி போட்டு முடிக்கப்படும்" என தெரிவித்தார்.

தடுப்பூசி கட்டாயம்

தொடர்ந்து பேசிய அமைச்சர் பொன்முடி, "சென்னையில் 112 அரசு, தனியார் கல்லூரி மாணவர்களுக்கான கரோனா தடுப்பூசி முகாமை தொடங்கியுள்ளோம். சுகாதாரத்துறை உதவியோடு தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் திட்டத்தை விரிவுபடுத்தவுள்ளோம்.

மேலும், செப்டம்பர் 1ஆம் தேதி கல்லூரிகள் திறக்கப்படும் போது அனைத்து மாணவர்களும் தடுப்பூசி செலுத்திக்கொண்டு தான் கல்லூரிக்கு வர வேண்டும். அனைத்து மாணவர்களும் முதல் டோஸ் தடுப்பூசி செலுத்தி கொண்டாலே போதுமானது" என தெரிவித்தார்.

இதையும் படிங்க : வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் - அதிமுக, பாஜக வெளிநடப்பு

ABOUT THE AUTHOR

...view details