சென்னை:சைதாப்பேட்டையில் உள்ள தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக வளாகத்தில், இன்று நடந்த தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் 10வது பட்டமளிப்பு விழாவில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பங்கேற்று பேசினார்.
அப்போது அவர், 'தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்திற்கான, பட்டமளிப்பு விழா அரங்கம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த 2008 ஆம் ஆண்டு முதலமைச்சராக கருணாநிதி இருந்தபோது, ஆசியாவிலேயே முதல்முறையாக ஆசிரியர்களுக்கான கல்வியியல் பல்கலைக்கழகம் இங்குதான் உருவாக்கப்பட்டது. நானும் ஆசிரியராக இருந்து இன்று அமைச்சராக இருக்கிறேன். இதற்கு முன்னதாக பேசிய, மணிப்பூர் ஐஐடி இயக்குனரும் அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆசிரியராக இருந்தவர் தான். இது வாத்தி சமுதாயம்.
உயர்கல்வித்துறையை மேம்படுத்த பல்வேறு முயற்சிகளை எடுத்து வரும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆரம்ப கல்வியையும் மேம்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறார். அதனடி, 'முதலமைச்சர் நேற்று திருச்சியில் 5 முதல் 8-ம் வகுப்பு வரை பயிலக் கூடிய மாணவர்களுக்கான வானவில் மன்றத்தைத் தொடங்கி வைத்தார்' என தவறுதலாகக் கூறினார். (பள்ளிக்கல்வித்துறையில் 'வானவில் மன்றம்' 6 முதல் 8 ம் வகுப்பு வரையில் அறிவியல் மற்றும் கணித பாடத்தின் மீது ஈர்ப்பு ஏற்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்ட திட்டம்)
தொடர்ந்து பேசிய அவர் “தமிழ்நாடு கல்வியில் முன்னோடியாக இருந்து வருகிறது. தமிழகத்துக்காக மாநில கல்வித்திட்டத்தை உருவாக்க குழு அமைக்கப்பட்டு, முதலமைச்சர் நடவடிக்கை எடுத்து வருகிறார். உயர்கல்வியை பொருத்தவரையில், எதுவாக இருந்தாலும் முன்னோடியாக செயல்பட்டு கொண்டிருப்பது தமிழ்நாடுதான். இந்தியாவிற்கே கல்வித்துறையில் முன்னோடி மாநிலமாக தமிழ்நாடு உள்ளது.
அவரே கன்பீஸ் ஆகிட்டாரு! - 'வானவில் மன்றம்' அமைச்சர் குழப்பமான பேச்சு! படிக்கும்போதே, பல்வேறு தொழில் முனைவோர்களுடன் தொடர்பு ஏற்படுத்தி கொள்ளவேண்டும். கல்வியியல் படித்தால் ஆசிரியராகத்தான் வேண்டும் என்று இல்லை. புதிய பள்ளிக்கூடம் தொடங்கலாம். இப்போதெல்லாம், அது நல்ல தொழிலாக உள்ளது. வரும் காலங்களில் கல்வியியல் படிப்புகளிலும் அறிவியல் மற்றும் தொழில்நுட்பங்களை பாடத்திட்டத்துடன் சேர்க்க வேண்டும். வெறும் மனப்பாடம் செய்துவிட்டு தேர்வு எழுதும் முறையை மட்டும் நம்பக்கூடாது.
பொதுஅறிவையும் வளர்த்துக் கொள்ளும் விதமாக பாடத்திட்டங்கள் அமைய வேண்டும். தொழில்சார்ந்த கல்வியை உருவாக்க வேண்டும். கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் புதிய கல்வி நடைமுறையை உருவாக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. அண்ணா சொன்ன இருமொழிக்கொள்கையிலே தமிழ்நாடு பயணிக்கிறது. ஆசிரியர்கள் மாணவர்களுக்கு மொழி அறிவையும், சமூக அறிவையும் ஏற்படுத்தவேண்டும்” என தெரிவித்தார்.
இதையும் படிங்க: திமுக பிரமுகர் கொலை மிரட்டல்? வேலூர் கலெக்டரிடம் விவசாயி கதறல்!