சென்னை: தமிழ்நாட்டில் உள்ள கூட்டுறவுச் சங்கங்கள் மற்றும் கூட்டுறவு வங்கிகள், பொதுமக்களுக்கு பல்வேறு வகையான கடன்களை வழங்கி வருகின்றன. வேளாண்கடன் அட்டை (KCC) திட்டத்தின் கீழ் கால்நடை வளர்ப்பு (ஆடு, மாடு, கோழி) மீன் வளர்ப்பு மற்றும் அவை சார்ந்த தொழில்களில் ஈடுபடும் விவசாயிகளுக்கு வட்டியில்லா கூட்டுறவுக் கடனாக ரூ.1,500 கோடி அளவில் வழங்கப்படும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
இந்த நிலையில், 2023-2024ஆம் ஆண்டு வேளாண் மற்றும் உழவர் நலத்துறை மானியக் கோரிக்கையின்போது, அமைச்சர் (வேளாண் மற்றும் உழவர் நலத்துறை) அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த அறிவிப்பினை செயல்படுத்தும் வகையில், அரசாணை (நிலை) எண்.168, கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை நாள் 18.12.2023-இல் ஆணை வெளியிடப்பட்டுள்ளது.